பிக் பாஸில் டிடிஎஃப் வாசனிடம் உமன் கார்டு காட்டிய அக்ஷிதா.. ரெட்கார்டு யாருக்கு? பஞ்சாயத்து இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போன வாரம் டிடிஎப் வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். அவரது முகேஷை தள்ளிவிட்டுவிட்டார், அதனால் அவரால் எங்களுக்கு சேஃப்டியே இல்லை என்றெல்லாம் போட்டியாளர்களும் சொல்லி வந்தனர். ஆனால் இந்த வாரம் டிடிஎஃப் வாசனை அக்ஷிதா அடித்திருக்கிறார். அதோடு என்னை தள்ளி விட்டுட்ட என்று பிரச்சனை செய்திருக்கிறார். இதனால் இந்த வாரம் யாருக்கு ரெட் கார்டு என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Bigg Boss Tamil season 10 Akshitha

பிக் பாஸ் அப்டேட்

நேற்று முன் தினம் இரவு தன்யா மற்றும் அவினாஷ் இருவருக்கும் சண்டை நடக்கும் போது, தன்யா என்ன தொட பாக்குறீங்களா என்று கேட்டதும் அன்ஷிதா தன்னுடைய அண்ணனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சப்போர்ட் செய்து இருந்தார். எப்படி எங்க அண்ணனை பற்றி நீ இப்படி எல்லாம் பேசலாம்? எங்க அண்ணன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது, என்றெல்லாம் சொல்லி இருந்தார். ஆனால் நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில் டிடிஎஃப் வாசனை தவாவை வைத்து அடித்திருந்தார்.

அதோடு நான் அவரை அடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை, என் கையை வைத்து தான் அவரை தடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கான குறும்படமும் சோசியல் மீடியா முழுக்க வைரலாகி வருகிறது. அதில் அன்ஷிதா வேண்டும் என்று அடித்தது போலத்தான் இருக்கிறது. வாசனுக்கு ஓகே கிட்ஸ் களின் ஆதரவு உண்டு. அது வெளியே வைத்தே பலருக்கும் தெரிந்ததுதான். அவர் உள்ளே போன பிறகு டைமண்ட் டாஸ்கி விளையாடியதை பார்த்து மேலும் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

Bigg Boss Tamil season 10 Akshitha

டி டி எஃப் வாசனுக்கு சப்போர்ட்

அதனாலே சோசியல் மீடியா முழுக்க அவருக்கு அதிக சப்போர்ட் இருந்து வருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் அவருக்கு அங்கிருக்கும் ரசிகர்கள் கைதட்டுவதை பார்த்ததுமே உள்ளிருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு சிலர் அதை நேரடியாக காட்டிவிடுகிறார்கள். குறிப்பாக ஜேசனை சொல்லலாம். வாசனுக்கு கைதட்டு வரும்போது எல்லாம் அவருடைய முகமே மாறிவிடும். கடுப்பாக உர்ரென்று உட்கார்ந்து இருப்பார். ஆனால் அன்ஷிதா முதல் வாரம் குறும்படத்தை பார்த்ததும் வாசனை பற்றி தான் நினைத்தது தவறு என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த வாரம் நேற்று நடந்த டாஸ்க்கில் டிடிஎஃப் வாசன் வெளியே போகும்போது அவரை மறித்து விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

குறும்படம் இருக்கு

அப்போது வாசன் தள்ளிப்போ என்று சொல்லிக்கொண்டே இருந்தார் அப்போதும் அன்ஷிதா அந்த இடத்தை விட்டு வழி விடாததால் ஷோல்டர் பக்கத்தில் தள்ளவும், எப்படி என்னை நீ தள்ளலாம்? என்னை தள்ளிட்டு போவியா? என்று கேட்கிறார். வெளியே போகிற மனுஷனை போகவிடாமல் மறைத்து நின்று கொண்டு இருந்தால் அவர் உங்க காலில் விழுந்து வழி விடுங்க என்று சொல்ல வேண்டுமா? என்று அன்ஷிதாவை நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள். இதனால் இந்த வாரம் அக்ஷிதாவிற்கு 2 குறும்படம் போட வாய்ப்பு இருக்கிறது.

திட்டும் நெட்டிசன்கள்

அதே நேரத்தில் தன்னை தள்ளியதால் அன்ஷிதா கடுப்பாகி கத்திக் கொண்டிருக்கும் போது கரிஷ்மாவும் அன்ஷிதாவுக்கு சப்போர்ட்டாக வாசனை திட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பேசி கொண்டிருக்கும்போது முனியம்மா வாசனுக்கு வார இறுதியில் அதிக கைதட்டு வருகிறது என்பதற்காக தான் அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காங்க என்று சொல்லியிருந்தார். இப்போது வாசன் மீது இருக்கிற பொறாமையில் தான் அன்ஷிதாவுக்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் கரிஷ்மாவையும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதனால் இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடு பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+