ஆபாச மெசேஜ் விவகாரம்.. தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டாமா?.. கார்த்தி சிதம்பரம் சொன்ன அந்த காரணம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதே போதுமானது என்றும் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களைக் கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karthi-chidambaram-says-arrest-of-tvk-mla-arul-vignesh-not-necessary-in-collector-harassment-case

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு, அந்த மாவட்த்தின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆட்சியரின் கணவர் ஜூலை 31 ஆம் தேதியே புகார் அளித்திருந்தும கூட, மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படாதது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்

ஆனால், தவெக அமைச்சர்கள் இது வெறும் வதந்தி என்றும், புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்தனர். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியது பொய்யான தகவல், தவறான கண்ணோட்டத்தில் மெசேஜ் அனுப்பவில்லை என்றும், திமுக ஐடி விங் மூலமாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார். அதேசமயம், ஆட்சியர் இந்த விவகாரத்தில் புகார் அளிக்காமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருந்தது.

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் தவெக எம்எல்ஏ மீது புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏவுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் ஆட்சியர் புகார் அளித்த போதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தலைமைச் செயலாளர் ஆட்சியரிடம் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வேறு இடத்திற்கு செல்லக் கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கைது அவசியமில்லை

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருல் விக்னேஷை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதே போதுமானது என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லா விஷயத்துக்கும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் நீதித் துறை அமைப்பில் கைது செய்வது என்பது தேவையில்லாமல் நடக்கிறது. ஒருவர், இன்னொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள், அல்லது சாட்சியைக் கலைப்பார்கள் என்று நினைத்தால் கைது செய்யலாம்.

சட்டப்படி நடவடிக்கை

அவர் வெளியே இருப்பதால் இன்னொருவரின் உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து இல்லை என்று காவல் துறையினர் நினைத்தால் கைது செய்ய வேண்டாம். கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளார். இதற்கு தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தில் தான் அதிக கோயில்கள் உள்ளன. ஒரு நாளைக்கு அதிக தேங்காய் உடைக்கிற மாநிலம் தமிழகம் தான். திருப்பரங்குன்றத்தில் புதிதாக ஒரு இடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று அரசியல் சாயம் பூசாமல் இருப்பது நல்லது. தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு தொடரும். இந்த 5 ஆண்டுகளும் எந்த மாற்றமும் வராது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+