கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு வக்காலத்து வாங்கியதால் சிக்கல்? மாணிக்கம் தாக்கூர் பதவி பறிபோகிறது?
சென்னை: கள்ளக்குறிச்சி சர்ச்சைகளில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. பாவம் என்று வக்காலத்து வாங்கியிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர். அவரது ஸ்டேட்மெண்ட் அப்போதே கடும் அதிர்ப்திகளை காங்கிரஸ் கட்சியில் வெளிப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகரமான போது, ஆளும் தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ் பாவம். எந்த ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் வதந்திகளை வைத்து அவர் மீது மீடியா விசாரணை நடத்துவது நியாயமல்ல.

சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வே தனது போனையும், சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்யுமாறு பாவமாகச் சொல்கிறார்" என்று கூறி அவரைப் பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியபோதும், மாணிக்கம் தாகூர் தவெகவுக்கு ஆதரவாகவே நின்றார்.
காங்கிரஸ் உள்ளேயே கடுமையான எதிர்ப்பு
மற்ற கட்சிகளும் அவரது ஸ்டேட்மெண்டை கண்டித்திருந்தனர். இதனையடுத்து, மாணிக்கம் தாக்கூரின் அந்த பேச்சிற்கு தமிழகத்தில் கண்டனங்கள் எழுவதாகவும், தவெக அரசுடன் நாம் கூட்டணியில் இருக்கலாம். அதற்காக, அந்த ஆட்சிக்கு எதிராக எழும் குற்றச்சாட்டு களுக்கு நாம் முட்டுக்கொடுப்பது மக்களிடம் காங்கிரசின் சுயமரியாதை கெடுகிறது.
அதுவும் மாநில தலைவரே இப்படி முட்டுக்கொடுப்பது ஆரோக் கியமான அரசியல் இல்லை. கலெக்டருக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ. மீது தொகுதி மக்களிடம் கெட்டப்பெயர் உருவாகியிருக் கிறது. இந்த பிரச்சனையில் தவெக அமைச்சர்கள் எதிர்வினையாற்றி வருகிற போது காங்கிரஸ் கட்சியும் வாண்டடா ஆபாச எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியதால் காங்கிரசையும், மானிக்கம் தாக்குரையும் கண்ட மேனிக்கு சோசியல் மீடியாக்களில் திட்டித் தீக்கிறார்கள்.
மாணிக்கம் தாக்கூரை பதவியிலிருந்து மாற்றுங்கள்
அவரை பதவியிலிருந்து மாற்றுங்கள் என்று அப்போதே அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் பலரும் புகார் அனுப்பியிருந்தனர். குறிப்பாக, ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்கள் இந்த புகார்களை அனுப்பியிருந்தனர். தற்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்ட தால், சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் உருவாகியிருக்கும் அனைத்து பின்னணி களையும் தொகுத்து, மாணிக்கம் தாக்கூரிடமிருந்து தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு மீண்டும் புகார் அனுப்பியுள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி தமிழக காங்கிரஸ் எம்.எபி.க்கள் நான்கு பேர், மானிக்கம் தாக்கூருக்கு எதிராக , காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் முறையிட்டுள் ளனர். இந்த விசயம் காங்கிரஸ் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
