மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன் மனு தள்ளுபடி..திமுக வேட்பாளர் மனுவுக்கு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ டி. இளங்கோவனின் வெற்றியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துவிட்டார். திமுக வேட்பாளர் ஏ. தமிழரசி தாக்கல் செய்த இந்தத் தேர்தல் மனு மீதான விசாரணையைத் தொடர அவர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) தொகுதியில் திமுக சார்பில் தமிழரசி ரவிகுமார் என்பவர் போட்டியிட்டார். தவெக சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார். இதில் தவெக வேட்பாளர் 69,971 வாக்குகள் பெற்றார். அடுத்தாக திமுக வேட்பாளர் தமிழரசி ரவிகுமார் 68763 வாக்குகள் பெறறார். சுமார் 1208 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

முன்னதாக 2021 சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. தமிழரசி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2026 தேர்தலில் தவெக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் தவெக வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக எம்எல்ஏ இளங்கோவன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் திமுகவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜே ரவீந்திரன், தாமேதரன் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் திமுக சார்பில் வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்துவிட்டார். அத்துடன் தவெக தவெக எம்எல்ஏ இளங்கோவனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். திமுக வேட்பாளர் ஏ. தமிழரசி தாக்கல் செய்த இந்தத் தேர்தல் மனு மீதான விசாரணையைத் தொடர அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திமுக வேட்பாளரின் மனுவுக்கு தவெக எம்எல்ஏ இளங்கோவனை பதில் அளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தமிழரசி தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 18ம்தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
