"மன்னித்து விடுங்கள்".. திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததால் உச்சநீதிமன்றத்தில் பணிந்த மதுரை கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்றைய தினம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து இன்று மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

thiruparankundram-deepam-madurai-collector-apologises-to-supreme-court

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதனை தமிழக அரசு பின்பற்றவில்லை என்பது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மூலம் மனுதாரரான ராமரவிக்குமார் சார்பில் இந்த முறையீடு செய்யப்பட்டது.

அப்போது மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அவர் மதுரை கலெக்டர் சார்பில் Status Report எனும் நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிவிட்டு 3 நாட்களுக்குள் அதன் நிலை அறிக்கையை மதுரை கலெக்டர் தாக்கல் செய்ய கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததால் உடனடியாக இன்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: '' மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படிய உறுதி பூண்டு இருந்தோம். நீதிமன்ற உத்தரவு மீது மிக உயர்ந்த மரியாதை கொண்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து சிரமங்களுக்கும் உடனடி தீர்வு வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது.

நேற்று மாலை 5.03 மணிக்கு தீபம் தொடர்பாக கோவில் நிர்வாகத்துக்கு இ-மெயில் அனுப்பினேன். நேற்று மாலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திருப்பரங்குன்றத்தில் அந்த குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றுவதற்கான தேவஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்றுவதற்கு வரவில்லை. மேலும் காலநீட்டிப்பு கோரியும் எந்த தகவலும் தெரிவிக்கப்பவில்லை.

இரவு 7.32 மணியளவில் கோவில் சார்பில் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்துந ான் கோவில் செயல் அலுவலரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் அவர் முக்கிய விஷயத்தை கூறினார். கோவில் அறங்காவலர் குழு தனித்தீர்மானம் நிறைவேற்றியது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் முறையை கடைப்பிடிக்க திட்டமிட்டது. கோவில் மரபுகளின்படி வழக்கம்போல் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்ற முடிவெடுக்கப்பட்டது என்று கூறினார்.

இரவு 8.30 மணிக்கு அதுதொடர்பான அறிக்கை என்னிடம் வழங்கப்பட்டது. அதில் வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோவிலிலேயே தீபம் ஏற்றுவது தொடர்பான அறங்காவலர் குழு தீர்மானம் இடம்பெற்றிருந்தது. இதனால் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கு மன்னிப்பு கோருகிறேன்'' என கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் என்பது தமிழக அறநிலையத்துறையின் கீழ் வரும். அறநிலையத்துறை தான் திருப்பரங்குன்றம் தேவஸ்தானத்தை கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோவில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டாம். வழக்கமே்பால் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோவிலிலேயே தீபம் ஏற்றலாம் என்ற முடிவின் பின்னணியில் தமிழக அறநிலையத்துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+