ஹனிமூன் பீரியட்னு சொன்னதை MLA அருள் விக்னேஷ் அதே அர்த்தத்தில் எடுத்து கொண்டார் போல! உதயநிதி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 6 மாதங்களை ஹனிமூன் பீரியட் என சொல்வோம். அதை இந்த எம்எல்ஏ அருள் விக்னேஷ் அதே அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார் போல என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அது போல் சமூக ஆர்வலரை தாக்கிய துணை சபாநாயகரும், துறையூர் எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

udhayanidhi stalin kallakurichi

சென்னை வேப்பேரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் டிஜிபியை சந்தித்து அவரிடம் புகார் மனு அளிக்க வந்திருந்தோம். ஆனால் டிஜிபியோ சிங்கப் பெண் படைக்கு பயிற்சி கொடுக்க சென்றிருப்பதாக அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் கேட்க விரும்பதெல்லாம் சிங்கப்பெண் படைக்கு என்ன பயிற்சி கொடுக்கறீங்க? அவர்களது வேலை என்ன? சிங்கப்படையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? முதல்வர் விஜய், பெரிய சாதனை போல் சிங்கப்பெண் படை குறித்து அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பதை பத்திரிகையாளர்களும் தமிழக மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு குறித்து நான் சட்டசபையிலும் பேசியிருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய முதல்வர் அன்று என்ன செய்தார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். கொலைகள், பாலியல் வன்முறைகள், போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை எத்தனை நடந்துள்ளன என்பதை டேட்டாவுடன் சட்டசபையில் பேசினேன். ஆனால் முதல்வர் அந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாமல் 60 ஆண்டுகளுக்கு முன்பு டைம் டிராவல் செய்து சம்பந்தமே இல்லாத கதைகளையெல்லாம் பேசியிருந்தார்.

அவர் சரியாக பதில் அளிக்காததன் விளைவு இன்று தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் 75 சதவீதத்திற்கு மேல் ஆளும் கட்சியின் நிர்வாகிகளே ஈடுபடுகிறார்கள். ஏதோ வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் அளவுக்கு இல்லை, மாவட்டச் செயலாளர், அமைச்சர், எம்எல்ஏக்கள் என வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ குறித்து பேசியதற்கு பதில் இல்லை. பல மாவட்டச் செயலாளர்கள் அவர்களது கட்சி பெண் நிர்வாகிகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதில் உச்சபட்சமாக, ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். தமிழகம் மட்டுமில்லை, இது வரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கேவலம் நடந்ததில்லை.

குடித்துவிட்டு ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். இதெல்லாம் எப்ப நடந்தது என பார்த்தால், தவெக ஆட்சிக்கு வந்தது மே 10-ஆம் தேதி! ஜூலை மாதமே இது போன்ற கேவலங்கள் நடந்துள்ளன. புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் ஹனிமூன் பீரியட் என சொல்வோம். அதாவது புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து 6 மாதங்கள் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்போம்.

நாம் ஹனிமூன் பீரியட் என சொன்னதை இந்த எம்எல்ஏ அருள் விக்னேஷ், முதல்வர் எல்லாம் அதே அர்த்தத்தில் எடுத்துக்கிட்டாங்க. Literal- ஆக அதே அர்த்தத்தில் எடுத்துக் கொண்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+