116 நாட்களா தூங்குறீங்களா விஜய்?.. ஹனிமூன் பீரியட்னு நினைச்சிட்டீங்களா?.. உதயநிதி சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பான எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜூலையிலேயே புகார் அளித்த நிலையில், 116 நாட்களாக முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா என்றும், ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தை உண்மையான ஹனிமூன் பீரியட்டாக நினைத்துவிட்டார்களா என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பிலும், திமுக தலைவர் சார்பிலும் மனு அளித்துள்ளோம். சிங்கப்பெண் படையின் பயிற்சி தொடர்பான நிகழ்ச்சி டிஜிபி சென்றுவிட்டதாகக் கூறினர்.

Udhayanidhi Stalin Vijay TVK

சிங்கப்பெண் படையின் வேலை என்ன

சிங்கப்பெண் படையின் வேலைதான் என்ன என்று தெரியவில்லை. சிங்கப்பெண் படை எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை. சிங்கப்பெண் படையை பார்த்திருக்கிறீர்களா. ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிங்கப் பெண் படையை பெரிய சாதனையாக முதல்வர் விஜய் அறிவித்தார். தவெகவினர் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு எவ்வளவு சந்தி சிரிக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்.

இதை சட்டமன்றத்திலும் நான் தொடர்ந்து பேசியுள்ளேன். எத்தனை கொலை, பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் கடத்தல் நடந்துள்ளன என்ற டேட்டாவுடன் சட்டமன்றத்தில் நான் பேசினேன். பல கேள்விகளைக் கேட்டேன். ஆனால், முதல்வர் அன்றை தினம் எந்த பதிலும் சொல்லாமல், 60 வருடங்களுக்குப் பின் சென்று சம்பந்தமில்லாமல் சட்டமன்றத்தில் பதில் கூறினார். அதனுடைய விளைவை தமிழக மக்கள் இன்று ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர்.

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் தவெகவினர்

தவெக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் தவறான செயல்களில், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 75 சதவீதம் பேர் தவெகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தான். ஏற்கனவே, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து பேசியதற்கு எந்தவித சரியான பதிலும் கொடுக்கவில்லை. பல மாவட்ட செயலாளர்கள் அவர்களுடைய கட்சிக்கார பெண்களையே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதில் உச்சபட்சமாக, கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்எல்ஏ தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கேவலமான விஷயம் இந்தியாவிலேயே எங்கேயும் நடந்ததில்லை. குடித்துவிட்டு கேம்ப் ஆபீஸுக்கே சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூலையிலேயே ஆட்சியர் புகார்

தவெக மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில் ஜூலை மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆட்சிக்கு வந்த 6 மாதத்தை ஹனிமூன் பீரியட் என்று கூறுவதை, அவர்கள் உண்மையிலேயே அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளனர். ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து இந்த விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது. எம்பி கனிமொழி முதலில் இந்த செய்தியை வெளியை சொல்கிறார்.

சங்கி அமைச்சர் ஒருவரை வைத்துள்ளனர். அவர் சம்பந்தமே இல்லாமல் பொய் சொல்லக் கூடியவர். 116 நாட்களுக்கு முன்பே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பிய சம்பவம் தொடர்பாக ஜூலையிலேயே ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அப்போது, வேறு மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு செல்லுமாறு அவர் கூறியுள்ளார். இவை எல்லாம் ஒவ்வொன்றாக தோண்ட தோண்ட வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

116 நாட்களாக தூங்குகிறாரா டம்மி முதல்வர்

எல்லோரும் இதைப் பற்றி கடந்த 1 மாதமாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்ற பின்னரே 116 நாட்களுக்குப் பிறகு எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். 116 நாட்களாக சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் டம்மி முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா. இதில் விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லப்படக் கூடிய ஆன்லைன் அபியூசர்ஸ் பாதிக்கப்பட்ட நபரையே தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், குற்றத்தை மூடி மறைப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே, குற்றத்தை மூடி மறைத்த தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் கூறினாரா இல்லையா, அப்படி கூறியிருந்தால் 116 நாட்களாக எதுவும் கூறாமல் இருப்பது ஏன்.

முட்டு கொடுக்கும் அமைச்சர்கள்

ஒருவேளை முதல்வரா பயமா என்பது தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதிலுக்கு அவரை ஒழுங்கா என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காக கேட்காமல் இருக்கலாம். இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விஷயத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த அமைச்சர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னுடைய வீட்டிற்கு மனு கொடுக்க வந்தவரை அடித்த வீடியோ வைரலான நிலையில், நடுராத்திரியில் அவரை அழைத்து மீண்டும் நண்பர்கள் போல பேசிய வீடியோவும் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, மனு கொடுத்தவர் 2, 3 மணி நேரத்திலேயே தன்னை அழைத்து மிரட்டி வீடியோ எடுத்ததாகவும், துணை சபாநாயகர் தன்னை அடித்ததாகவும் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவம் நடந்து 16 நாட்களாகியும் அதன் மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துணை சபாநாயகர் மீதும் நடவடிக்கை தேவை

எனவே, துணை சபாநாயகர் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். 116 நாட்களாக தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை மறைப்பதற்கான வேலையில் அரசு ஈடுபட்டு வருவதால், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+