விஜய் கொடுத்த பதவி.. கள்ளக்குறிச்சி MLAவை பார்த்து மனம் நொந்த தாடி பாலாஜி.. முதல்வருக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகார் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவாகரத்தில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதால் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வருகிறது. இப்போது விஜய்யின் நண்பரும் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகியவருமான தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோவும் கவனம் இருந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவாகரத்தில் பலரும் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்தை பார்த்து மனதளவில் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தாடி பாலாஜி பேசியிருக்கிறார். குறிப்பாக விஜய் ஒருவருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த போதும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்குவது அவருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக அந்த வீடியோவில் சொல்லி இருக்கிறார்.

Thaadi Balaji

தாடி பாலாஜி வீடியோ

அந்த வீடியோவில் தாடி பாலாஜி பேசியதாவது, "எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன்னா எல்லோருக்கும் பரிச்சயமான முகமாக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் முதல்வர் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறார். அவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கென ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார். அந்த இடத்தை உங்களால் தக்க வச்சிக்க முடியலையே? இதெல்லாம் எவ்வளவு பெரிய கிப்ட் தெரியுமா? இந்த மாதிரி இடம் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைத்திடாது!

உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் அதை தக்க வச்சிக்க தெரியல. நீங்க பண்ணுன வேலையால உங்க பேரு கெட்டதும் இல்லாம, உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கீங்க. இது எவ்வளவு பெரிய தவறு? இந்த மாதிரி பண்ணலாமா? இது ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ என்னால முதல்வரை சந்திக்க முடியுமா? இல்லையா? என எனக்கு தெரியல, ஒருவேளை இந்த வீடியோவை அவர் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அவருக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.

முதல்வரிடம் வேண்டுகோள்

இனிவரும் காலங்களிலாவது உங்களுக்கு நம்பிக்கையானவர்களை நீங்களே தேர்ந்தெடுக்கணும். நீங்க என்ன செய்யணும் என்று நினைக்கிறீர்களோ அல்லது இவர் செய்வார் என்று நினைக்கிறீர்களோ, அப்படிப்பட்டவர்களை உங்கள் நீங்கள் உங்களுடைய நேரடி பார்வையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய சின்ன வேண்டுகோள். ஒரு நண்பராக, அதை தாண்டி உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களில் நானும் ஒருவர் என்ற வகையில் இந்த வேண்டுகோள் வைக்கிறேன்" என்று பேசி இருக்கிறார்.

தாடி பாலாஜி ஆதங்கம்

விஜய்க்கு நெருக்கமாக நண்பராக இருந்த தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இருந்தார். பின்னர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், இப்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ கவனிக்கப்படுகிறது. ஒரு பதவி என்பது சாதாரணமாக கிடைத்துவிடக்கூடிய விஷயம் கிடையாது. மக்கள் கொடுக்கும் ஆதரவு, தலைமை கொடுக்கும் நம்பிக்கை என பல விஷயங்கள் சேர்ந்து தான் அந்த இடத்தை பெற்று தருகிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த பிறகு அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்பதுதான் தாடி பாலாஜி ஆதங்கமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+