அதிமுகவில் யாருக்குக் கடிவாளம்?.. நிர்வாகிகளின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக அடுத்தடுத்து தோல்விகளால் அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து கொண்டே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி, வேலுமணி இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது, அறிக்கை வெளியிடுவது கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

admk-cadres-should-get-approval-from-party-hq-before-giving-media-interview-said-edappadi-palanisamy

எடப்பாடி வேலுமணி பஞ்சாயத்து

திமுவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டினைர்கள். இதை எடப்பாடி மறுத்தார். வேலுமணியில் இருந்த இரண்டு விஜயபாஸ்கர்கள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். வேலுமணி, எடப்பாடி அணி சமாதானம் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்கவில்லை. கட்சியில் இருந்து பிரிந்த சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று வேலுமணி கூறினார்.

இதை ஏற்க எடப்பாடி மறுத்துவிட்டார். வேலுமணி இரண்டு கோடி அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று எடப்பாடி கூறினார். தொண்டர்களால் தேர்வு செய்த பொதுச்செயலாளர் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று வேலுமணி பதிலடி கொடுத்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனிருத் காவ்யா திருமண வரவேற்பில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அருகில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசினார். இதுவும் விமர்சனமானது.

வெளியான கறார் உத்தரவு

அதிமுக செய்தித்தொடர்பாளர்களுக்கு அக்கட்சி தலைமை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "அதிமுக கட்டுக்போப்பான இயக்கம். தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தித்தொடர்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஒப்புதல் இல்லாமல் பத்திரிகை, தொலைக்காட்சி, யூடியூப் ஆகியவற்றுக்கு பேட்டி கொடுக்க கூடாது. தலைமையின் ஒப்புதலை பெற்றே ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டும். பொதுச்செயலாளரின் ஒப்புதல் பெற்றே அறிக்கைகளையும் வெளியிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+