உச்சநீதிமன்றம் சொன்னதைதான் செய்ய முயன்றோம்.. கோர்ட்டில் ட்விஸ்ட் வைத்த மதுரை ஆட்சியர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை மீது, உச்சநீதிமன்றம் சொன்ன தூணில் தீபம் ஏற்றாதது குறித்து நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆனால், நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருக்கும் அறிக்கை கவனம் பெற்றிருக்கினற்ன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து, மாவட்ட நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் முதல் கட்ட நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Tiruparankundram Madurai Collector Supreme Court

அதில், நவம்பர் 24 அன்று இரவு 7:32 மணிக்கு கோயில் நிர்வாகத்தின் செய்தி குறிப்பு கிடைக்கப்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து கோயில் செயல் அலுவலரை தொடர்பு கொண்ட போது.. அறங்காவலர் குழுவின் தீர்மானத்தால் தன்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இரவு 8.30 மணி அளவில் செயல் அலுவலர் அளித்த அறிக்கையில், அறங்காவலர் குழுவின் தீர்மானம் எண் 1ன் படி இந்த ஆண்டும் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே.. அதாவது உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீபமண்டபத்திலே மாலை 6 மணி அளவில் மகாதீபம் ஏற்றப்பட்டதாகவும், கோயில் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. தேவஸ்தானத்திற்கு பதிலாக வேற யாரையும் தீபம் ஏற்ற அங்கீகரிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இரவு 8.21 மணிக்கு ஒருங்கிணைப்பு வழக்கறிஞரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை ஓகேதான். தீபம் ஏற்ற முடியவில்லை என்பதற்கான காரணங்களாக இது இருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முயன்றதாக ஆட்சியர் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

ட்விஸ்ட் வைத்த கலெக்டர்

அதாவது, தீபம் ஏற்றுவதற்கான நபர்களை தேவஸ்தானம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக.. நவம்பர் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கூட்ட குறிப்புகள், கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலமாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் மற்றும் செயலாளரின் தலையீட்டை கோரி.. மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் முயற்சி செய்தது. ஆனால், தேவஸ்தானம் அந்த அங்கீகாரத்தை வழங்காமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தீர்மானித்துவிட்டது என்று ஆட்சியர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமான மன்னிப்பு கோருவதாகவும், அனைத்து ஆவணங்களுடன் கூடிய கூடுதல் நிலை அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடைசி வரை ஆட்சியர், உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற சொன்ன தூணில் தீபம் ஏற்றுவதற்கு ரெடியாகத்தான் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+