கார்த்திகாவுக்கு இரவு உடையிலேயே கைது.. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு மட்டும் சலுகையா?: கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டும் தவெக அரசு, தனது கட்சியினர் மீது புகார் வந்தால் அமைதியாக இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி வாக்கு கேட்ட தவெக அரசு, தனது கட்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kanimozhi

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 31-ம் தேதியே அதிகாரிகளின் கவனத்துக்கு புகார் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும் இத்தனை நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. புகார் குறித்த செய்திகள் வெளியானபோது, அதை மறுத்து வந்த தவெக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியரே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்தனர்.

அருள் விக்னேஷ் கைது எப்போது?

இதனிடையே, அருள் விக்னேஷ் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதன் பிறகு அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எம்எல்ஏ பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டால் கட்சிக்கு ஏற்படக்கூடிய அரசியல் பாதிப்பை குறைக்கும் என்பது தவெக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.. இருந்தாலும் அருள் விக்னேஷ் ராஜினாமா குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தவெக அரசுக்கு கேள்வி

எனினும் இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதேபோல், இந்த விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளிவர சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்த துவங்கி விட்டார்கள்.

திமுக எம்பி கனிமொழி விமர்சனம்

இப்படிப்பட்ட சூழலில், திமுக எம்பி கனிமொழி மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தை ஆரம்பத்திலேயே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த திமுக எம்.பி. கனிமொழி, இப்போதும் அதே வேகத்துடன் இந்த பிரச்சனையில் குரல் கொடுத்து வருகிறார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், எதிர்க்கட்சியினர் மீது வேகமாக நடவடிக்கை எடுக்கும் தவெக அரசு, தனது கட்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் மட்டும் ஏன் மெத்தனமாக இருக்கிறது என்று தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆமை வேகம் - ஜெட் வேகம்

கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாதகவை சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, "Gen Z DMK"-ல் செயல்பட்ட இளைஞர்கள் என்று தன்னை கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாக கைது செய்தது இந்த அரசு.

தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய தவெக அரசு" என்று அதில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

இரவு உடையில் கார்த்திகா கைது

தாராபுரத்தில் நடைபெற்ற ரோட் ஷோ செல்லும் வழியில் அனுமதியின்றி கூடி, போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர் நாம் தமிழர் கட்சி கார்த்திகா..

இதற்காக கடந்த அக்டோபர் 20, 2026 அதிகாலையில் கோவையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். உடை மாற்றக் கூட அவகாசம் அளிக்காமல் இரவு உடையில் தன்னை அழைத்து சென்றதாக கார்த்திகாவே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.. இந்த நிகழ்வைதான் திமுகவின் மூத்த தலைவர் கனிமொழி, இப்போது சுட்டிக்காட்டி தவெக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+