தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர்.. சிருஷ்டி சிங் முன்பு ஆஜராக சம்மன்!

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று, அருள் விக்னேஷ் வீட்டுக்குச் சென்று சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்கே இரவு நேரத்தில் சென்று தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு விமர்சனங்களும் எழுந்தன.

Kallakurichi Arul Vignesh TVK

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும், தவெக அரசு, அருள் விக்னேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அருள் விக்னேஷ் பற்றி பரவுவது வதந்தி என தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இதனிடையே, அதிமுக பெண் வழக்கறிஞரான ஆர். த்ரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை வடக்கு மண்டல ஐஜி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பிஎன்எஸ் 75, 78, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்குச் சென்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீசார், எம்எல்ஏவிடம் விசாரணை நடத்தினர்.

ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், ஐஏஎஸ் அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது எஃப்ஐஆர் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு வந்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி சம்மன் வழங்கினார். இன்று நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அருள் விக்னேஷுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை கள்ளக்குறிச்சிக்கு வருகை தருகிறார். அவரிடம் இந்த வழக்கின் ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன.

அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம், விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணை நடத்த உள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று, அருள் விக்னேஷ் வீட்டுக்குச் சென்று சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

போலீசார் ஆதாரங்களைத் திரட்டி வரும் நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், அரசியல் அழுத்தம் காரணமாக அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+