Miss Universe 2026:பிரபஞ்ச அழகியாக புவேர்ட்டோ ரிக்கா பெண் தேர்வு.. மிஸ் செய்த கேரளா இளம்பெண்
சான் யுவான்: 'மிஸ் யுனிவர்ஸ் 2026' எனும் 2026ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ வென்றார். இந்த போட்டியில் கேரளாவை சேர்ந்த 19 வயது நிரம்பிய பெங்களூர் சட்டக்கல்லூரி மாணவி கசியா லிஸ் மெஜோ நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டார்.

'மிஸ் யுனிவர்ஸ்' எனும் 'பிரபஞ்ச அழகி' போட்டி கடந்த 1952ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. 75-வது பிரபஞ்ச அழகி போட்டி புரெட்டோ ரிக்கோ நாட்டின் தலைநகர் சான் யுவான் நகரில் இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பிரபஞ்ச அழகி போட்டியை நடத்திய புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த இளம்பெண்ணே பட்டம் வென்றார்.
அதன்படி புவெர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ 2026ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றார். இந்த போட்டியில் மொத்தம் 116 பெண்கள் பங்கேற்ற நிலையில் ஜெனிபர் பராரெட்டோ வென்றார். அவருக்கு 'பிரபஞ்ச அழகி 2026' என்பதற்கான மகுடம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட வெள்ளை தங்க கிரீடம் தலையில் சூடப்பட்டது.
இந்த போட்டியில் இந்தியாவிற்கு பட்டம் கிடைக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் கேரளாவை சேர்ந்த 19 வயது நிரம்பிய காசியா லிஸ் மெஜோ என்பவர் பங்கேற்றார். இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் சட்டப்படிப்பை படித்து வருகிறார். இவர் 'பிரபஞ்ச அழகி' பட்டத்தை வெல்வார் என பலரும் நம்பிக்கை தெரிவித்த நிலையில் அது நடக்கவில்லை.
காசியா லிஸ் மெஜோ 'டாப் 12' போட்டியாளர்கள் பிரிவுக்குள் நுழைய முடியாமல் வெளியேறினார். இந்த காசியா லிஸ் மெஜோ கேரளாவில் மாவெளிக்கரை சேர்ந்தவர். ஆனால் அவர் வளர்ந்தது எல்லாம் அபுதாபியில் தான். அங்கு தான் அவர் பள்ளி படிப்பை முடித்தார். தற்போது பெங்களூரில் சட்டப்படிப்பை படித்து வருவதோடு, மாடலாகவும் இருக்கிறார்.
அதுமட்டுமின்றி பாடல்கள் பாடுவது, வயலின் மற்றும் டிரம்ஸ் இசைப்பதில் காசியா லிஸ் மெஜோவிற்கு ஆவர்ம் அதிகம். அதனையும் அவர் கற்று வைத்துள்ளார். அதோடு 'ஷைலாக்' என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவிலும் அறிமுகம் ஆகி உள்ளார்.
முன்னதாக 2026ல் 'மிஸ் யுனிவர்ஸ் கேரளா' பட்டத்தை வென்றார். இந்த பட்டத்தை வென்ற மிக இளவயது நபர் என்ற பெயரையும் பெற்றார். பிறகு ஆகஸ்ட் 23ல் ஜெய்ப்பூரில் 52 போட்டியாளர்களுடன் நடந்த போட்டியில் அவர் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' ஆக தேர்வானது. இந்த பட்டம் தான் அவர் மீதான கவனத்தை அதிகரித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் 'மிஸ் யுனிவர்ஸ் 2026' போட்டியில் பின்னடைவை சந்தித்தார்.
'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த 3 பேர் வென்றுள்ளனர். 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை 1994-ம் ஆண்டில் சுஷ்மிதா சென், 2000ம் ஆண்டில் லாரா தத்தா மற்றும் 2021ல் ஹர்னாஸ் சந்து ஆகியோர் இந்த பட்டத்தை வென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
