58,500 வரை சம்பளம்.. கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அதற்கு டிசம்பர் 4-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். சம்பளம், கல்வி தகுதி மற்றும் விவரங்களை விவரமாக பார்ப்போம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான கால அட்டவணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

இந்த பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பணிகளுக்கு டிசம்பர் மாதம் 23, 24 மற்றும் 28, 29, 30-ந்தேதிகளில் நடைபெறும். இதைத்தொடர்ந்து நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் ஜனவரி மாதம் 5-ந்தேதி அனுப்பப்படும்.
நேர்காணல் ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும். நேர்காணல் முடிந்த பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் ஜனவரி 25-ந்தேதி வெளியிடப்படும். அவர்களுக்கு ஜனவரி 27-ந்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும். பணிக்கான ஊதியம் ஊதிய நிலை 2-ல் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100-ம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு மற்றும் காலி பணியிட விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கலாம்" இந்த தகவலை அரசு வெளியிட்டு உள்ளது.
www.tnrd.tn.gov.in" title="திருப்பரங்குன்றத்தில் திமுகவின் அதே பாதையில் தவக.. உச்ச நீதிமன்ற உத்தரவைக்கூட மதிக்கல.. எல் முருகன்
தேர்வு கால அட்டவணை
பதவியின் பெயர்: கிராம நிர்வாக அலுவலர்
விண்ணப்பம் தொடக்கம்: டிசம்பர் 4
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 18
விண்ணப்பங்கள் பரிசீலனை: டிசம்பர் 23, 24, 28, 29, 30
நேர்காணல் அழைப்புக் கடிதம்: ஜனவரி 5
நேர்காணல் : ஜனவரி 19-21
தேர்வு பட்டியல்: ஜனவரி 25
பணி நியமன ஆணை: ஜனவரி 27
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnrd.tn.gov.in" loading="lazy" width="200" height="112">
தேர்வு கால அட்டவணை
பதவியின் பெயர்: கிராம நிர்வாக அலுவலர்
விண்ணப்பம் தொடக்கம்: டிசம்பர் 4
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 18
விண்ணப்பங்கள் பரிசீலனை: டிசம்பர் 23, 24, 28, 29, 30
நேர்காணல் அழைப்புக் கடிதம்: ஜனவரி 5
நேர்காணல் : ஜனவரி 19-21
தேர்வு பட்டியல்: ஜனவரி 25
பணி நியமன ஆணை: ஜனவரி 27
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnrd.tn.gov.in



Click it and Unblock the Notifications
