தப்பு பண்ணிட்டீங்க விஜய்.. இனிதான் பிரச்சனையே.. பாஜக எடுக்க போகும் அஸ்திரம்.. தமிழிசை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, தவெக அமல்படுத்தவில்லை என்பது விமர்சனமானது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தவெக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. கார்த்திகை தீபமான நேற்று திருப்பரங்குன்றத்தில் குறிப்பிட்ட கல்லில் தீபம் ஏற்றாமல், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்பட்டது. தவெக இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனி தான் உங்கள் போராட்டம் ஆரம்பம் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மிகப்பெரிய கோபத்தில் நாங்கள் வந்துள்ளோம். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவார்கள் என்று இந்து பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எதையும் மதிக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம். நான் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை கடுமையாக கண்டிக்கிறேன்.

thiruparankundram-deepam-row-tamilisai-warns-vijay-says-bjps-fight-is-just-beginning

இது சரியில்லை விஜய்

இந்துக்களை உதாசீனப்படுத்திவிட்டோம் என்று நிர்மல் குமார் யாருக்கு இந்த செய்தியை சொல்கிறார்கள். இவர் சட்ட அமைச்சராக இருக்க பயனில்லை. விஜய் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பை நடைமுறைப்படாத்ததற்கு என்ன காரணம். கூட்டணி கட்சியினரை திருப்திப்படுத்தி இந்துக்களை அவமதித்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியல் இல்லை விஜய் அவர்களே. மக்கள் யாரை நம்புவார்கள்.

உயர் நீதிமன்றத்திற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வருகிறார். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்பதை போல காலம் கடத்தினர்கள். நீதிபதி உடும்பு பிடியாக, இந்த வழக்கை ஏற்பேன் என்று கூறிவிட்டார். உச்ச நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் தான் இதற்கு கண்காணிப்பு அலுவலர். தேவைப்பட்டால் ராணுவத்தை கூப்பிடுங்கள் என்று தெளிவாக சொல்லிவிட்டது. அதன் பிறகும் ஏற்காமல் உச்சி பிள்ளையாரில் தீபம் ஏற்றுவோம் என்று செய்துள்ளனர்.

இனிதான் பிரச்சனையே

இனிதான் எங்கள் போராட்டம் தொடங்க போகிறது. யாரை திருப்திபடுத்துகிறீர்கள். அவர்கள் யாரும் உங்களுடன் இருக்க மாட்டார்கள். அவர்கள் திமுகவுடன் இருந்தவர்கள். திமுகவுடன் இப்போது அவர்கள் இல்லை. உங்களிடம் இருந்தும் அவர்கள் ஓடிப்போவார்கள். இந்துக்களின் உணர்வை மதிக்கவில்லை என்றால் எதற்காக கோயில் சென்றீர்கள். எங்களை எல்லாம் ஏன் கைது செய்தார்கள். ஜவாஹிருல்லா, திருமாவளவனை எல்லாம் எப்படி அனுமதித்தார்கள். இதற்கெல்லாம் பெரிய விலை கொடுக்க வேண்டும்.

இது முதுகில் குத்தும் கூட்டணி. மக்கள் தீர்ப்பு என்று ஒன்று இருக்கிறது. விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றில் இருந்து உங்களுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. யாரை உதாசீனப்படுத்துகிறீர்கள். கள்ளக்குறிச்சியில் உங்கள் மானம் கப்பல் ஏறி கொண்டிருக்கிறது. பெண்கள், இந்துக்களை பற்றி கவலை இல்லை. இந்த அரசை கடுமையாக எச்சரிக்கிறோம். என்ன சட்டவிதிகளை மதிக்கிறீர்கள். பொது மக்கள் யாரும் இதை வரவேற்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+