இன்று காலை கடைவீதிக்கு சென்ற ஐயப்ப பக்தர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.. சிவகங்கை அருகே அதிர்ச்சி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே இன்று காலையில் கடைவீதிக்குச் சென்ற விவசாயி மகேஸ்வரன் (40) ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ள தேவனிப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் விவசாயி மகேஷ்வரன். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்த மகேஷ்வரன், இன்று காலை பலசரக்கு கடை ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, காரில் வந்த ஒரு மர்ம கும்பல், அங்கு வந்து, மகேஷ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளது. அவர் உயிர் தப்பிக்க ஓடிய நிலையில், அந்த கும்பல் விரட்டி விரட்டி வெட்டியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் மகேஷ்வரன் பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து, மகேஷ்வரனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications
