இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்! தேவாவின் கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்.. ஸ்ரீகாந்த் உருக்கம்
சென்னை: ஒருவர் வாழும் போது எப்படி நடந்து கொண்டார், எத்தனை பேரிடம் அன்பாக இருந்தார்? என்பதெல்லாம் அவர் மறைந்த பிறகு தான் சில நேரங்களில் நமக்கு முழுமையாக தெரியவரும். அப்படித்தான் இசையமைப்பாளர் தேவா மறைந்த பிறகு நடந்த ஒரு சம்பவத்தை அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா பகிர்ந்து இருக்கிறார். அப்பாவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று மருத்துவமனையில் போராடிய அந்த நேரத்தில் கடைசியில் நடந்த ஒரு விஷயம் தன்னை எந்த அளவுக்கு நெகிழ வைத்தது என்பதை அவர் கூறியிருக்கிறார்.
தேவா உடல்நிலை திடீரென முடியாமல் ஆனதும் அவரை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே அவருக்கு சிகிச்சை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் தேவா ஏற்கனவே இறந்து விட்டதாகவும், தங்களால் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் குடும்பத்தினர் எந்த மனநிலையில் இருந்திருப்பார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்ரீகாந்த் தேவா பேட்டி
அப்பாவை இழந்த அதிர்ச்சியில் இருந்த ஸ்ரீகாந்த் தேவா, ஹாஸ்பிடல் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அங்கு நடந்த விஷயம் தான் அவரை இன்னும் உருக்கமாக பேச வைத்திருக்கிறது. ஸ்ரீகாந்த் அந்த சம்பவத்தை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். "நான் எவ்வளவு பணம் ஹாஸ்பிடலுக்கு கட்ட வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவங்க தேவா சாருக்கு நாங்க பணம் கேட்கிறதா? அவரை எப்படியாவது உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு எந்த பணமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
நான் அவர்களிடம் மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தி கேட்டேன். அப்போ உங்களுக்கு முடிஞ்சா ஆம்புலன்ஸ்க்கு மட்டும் பணத்தை கொடுங்க என்று சொன்னாங்க. நானும் சரி என்று ஆம்புலன்ஸ் டிரைவரிடம் போய் சொன்னேன். அவர் எங்களால் இந்த இழப்பையே தாங்கிக்க முடியல. அவருக்கு நாங்க பணம் வாங்கவே மாட்டோம், எங்க வண்டியில கூட அவருடைய பாட்டை தான் நாங்க கேட்டுட்டு போவோம். ஆனால் இப்போ அவரை கூட்டிட்டு போறது எங்களுக்கு பெரிய புண்ணியம் என்று சொல்லிட்டாங்க. அந்த நேரத்தில் தான் அப்பா எவ்வளவு நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரிந்தது.
ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்
பணம் காசுக்காக பலர் எவ்வளவோ போராடிட்டு இருக்காங்க. ஆனால் நான் தருகிறேன் என்று சொன்னபோது கூட அப்பாவுக்காக கடைசியில் யாருமே வாங்க மறுத்து விட்டார்கள். அப்பாவுக்கு அதில் நான் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவே இல்லை" என்று ஸ்ரீகாந்த் தேவா உருக்கமாக பேசியிருக்கிறார். இதை கேட்கும் போதே தேவா மீது அனைவருக்கும் இருக்கும் மரியாதை தெரிகிறது.
ஸ்ரீகாந்த் தேவா அந்த சமயத்தில் தன்னுடைய தந்தையை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் சமயத்திலும் அவருக்கு ஆறுதலாக மருத்துவமனை ஊழியர்கள் முதல் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வரை நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் தேவா இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதுமே ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். அது போல சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

ஆல் ரவுண்டர் இசையமைப்பாளர்
சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி, மோட்டிவேஷனலாக என்றாலும் சரி தேவாவின் பாடலை கேட்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். கானா பாடல்கள் மட்டுமல்லாமல் மெலடி பாட்டுகளிலும் தேவாவை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்வதுபோல பல பாடல்களை போட்டு இருக்கிறார். ஒரு சில பாடல்கள் எல்லாம் தேவா தான் இசையமைத்தார் என்பதே பலருக்கும் தெரியாது. அதை சொல்வது போலத்தான் லப்பர் பந்து திரைப்படத்தில் கூட
"ஆடியில சேதி சொல்லி" என்ற பாடல் ஒலிக்கும் போது இளையராஜா பாட்டு என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க, "இளையராஜா இளையராஜா தான்.. இது தேவா பாட்டு" என்று ஒருவர் சொல்லி இருப்பார்.
காரணம் பலருக்கு தேவாவின் மெலடி பாடல்கள் தெரிந்திருக்காது. பாடல்கள் செமையாக ஹிட்டானாலும் இது இளையராஜா போட்டது என்று நினைத்து இருப்பார்கள். அதற்கு பதில் சொல்வது போல தின் அந்த படத்தில் கூட அப்படி ஒரு காட்சி வைத்திருந்தார்கள். இப்படி பலருடைய மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவாவின் இழப்பு ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் வருத்தத்தை கொடுத்திருந்தாலும், அனைவரின் அன்பால் இந்த குடும்பம் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications
