கன்னி ராசிக்கு ராகு கேது அள்ளிக் கொடுக்கும் பணம்.. 200% காதல் திருமண யோகம்.. சொத்துக்கள் சேரும்

Subscribe to Oneindia Tamil

Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது கன்னி ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசியினர் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். கேது பகவான் லாப ஸ்தானத்தில் வந்து அமர்வதால் அற்புதமான அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வேற்று மொழி, மதம், ஜாதி, இனத்தைச் சேர்ந்தவர்களால் லாபம் கிடைக்கும். மூத்த அக்காக்களுக்கும், உங்களுக்கு சிறு சிறு தகராறுகளும், பிரச்சனைகளும் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேறு மொழி பேசும் நண்பர் மூலமாக மிகப்பெரிய பணம், லாபம் கிடைக்கும்.

rahu-ketu-peyarchi-2026-massive-career-growth-financial-gains-for-kanni-rasi

பணவரவில் அற்புதம்

பெரிய பெரிய ஆசைகள், அபிலாஷைகள் நிறைவேறும். சம்பந்தமே இல்லாதவர்கள் உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். பெரிய பணம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக பெரிய அளவில் பணம் வந்து சேரும். வேற்று மொழி மனிதர்கள் மூலமாக, ஆன்மீகவாதிகள், வழக்கறிஞர்கள், உயரதிகாரிகள், வைதீக காரியங்கள் செய்யக் கூடிய நபர்கள், கெமிக்கல் வல்லுநர்கள் மூலமாக நல்லவை அதிகமாக நடக்கும்.

யோகம்

கால், முட்டி, நரம்புகள் போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. விட்டமின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. 5 இல் ராகு வருவதால் ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படும். வாரிசு உருவாவதற்கான வாய்ப்புள்ளது. அருமையான வீடு, திருமண மண்டம், டெக்கரேட் செய்து வைத்துள்ள கல்யாண மண்டபம் போன்றவற்றை கட்டக்கூடிய, வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.

சொத்துக்கள் சேரும்

தாய் வழி சொத்துக்கள், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். நிறைய சமூக சேவைகளை செய்வீர்கள். மூத்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. உடம்பில் உஷ்ணம் அதிகரிப்பது, பருக்கள் அதிகம் வருவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. பிள்ளைகள் மூலமாக நிறைய பணங்கள் வந்து சேரும்.

காதல் திருமணம்

பெரிய மாற்றமும், சந்தோஷமும் ஏற்படும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல இடத்திற்குச் செல்லும் யோகம் உண்டு. 200 சதவீதம் காதல் திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது நன்மையைத் தரும். சத்தமே இல்லாமல் நல்ல காரியங்கள் நடக்கும். சந்தோஷத்தின் அளவு 90 சதவீதம் அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.

வழிபாடு, பரிகாரம்

குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும். சனிக்கிழமையன்று குலதெய்வத்துக்கு அபிஷேகம் செய்து கிரே கலர் வஸ்திரம் சாற்றுவது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+