காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த அகிலேஷ் யாதவ்! ராகுல் காந்தி கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸுடன் இணைந்து சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இப்படி இருக்கையில் அகிலேஷ் யாதவின் செயல் காங்கிரஸை ரொம்பவே டென்ஷனாக்கியிருக்கிறது.
தற்போது இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில்.. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி வெளியிட்டு, காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியவே இல்லை.. அதுக்குள்ள முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால் என்ன அர்த்தம்? எங்களை பார்த்தால் எப்படி தெரியுது? என்று உ.பி கதர் தலைகள் டென்ஷனாகியிருக்கின்றன.

உத்தரப் பிரதேச தேர்தலும் காங்கிரஸும்
உத்தரப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் கெத்தாக இருந்த காங்கிரஸ், இப்போது வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரை போல இருக்கிறது. பெரிய அளவில் செல்வாக்கெல்லாம் இல்லை.
2012-ல் 28 தொகுதிகளில் வெற்றி (11.63%)
2017-ல் வெறும் 7 தொகுதிகளில் வெற்றி (6.25%)
2022-ல் வெறும் 2 தொகுதிகளில் வெற்றி (2.33%)
இதுதான் உ.பியில் காங்கிரஸின் ஸ்டிரைக்கிங் ரேட். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெறுவது என்பதெல்லாம் ரொம்பவே அநியாயம். ஆனால், இவ்வளவு பெரிய தோல்வியை வைத்துக்கொண்டு.. இந்தமுறை காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் எத்தனை தெரியுமா? 181. வெட்டுனா வளருவதற்கு காங்கிரஸ் என்ன வாழை மரமா? அது ஆலமரம். அவ்வளவுதான் கதை முடிஞ்சுது. இதெல்லாம் ராகுல் காந்திக்கே நல்லா தெரியும். ஆனாலும் பாருங்க எவ்வளவு தில்லா 181 தொகுதிகளை கேட்குறாங்கனு.
எல்லாத்தையும் கவனித்த அகிலேஷ் யாதவ், இப்படியே போனா வேலைக்கு ஆகாது என்று சொல்லி.. தனது பானி பாலிடிக்ஸை கையில் எடுத்திருக்கிறார். 181 தொகுதிகளுக்கு பூத் லெவலில் கூட இவர்களுக்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள். தொகுதிகளை குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால்.. நாங்க எல்லாம் யாரு தெரியுமா? என நேரு, இந்திரா காந்தி காலத்திற்கு போய்விடுவார்கள். எனவே நாம் செய்ய வேண்டியதை செய்வோம். அவர்களாக வழிக்கு வருவார்கள் என்று முதற்கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
உம் அலி கான் - பெஹத் (சஹாரன்பூர் மாவட்டம்)
ஆஷு மாலிக் - சஹரான்பூர்
நஹித் ஹசன் - கைரானா (ஷாம்லி மாவட்டம்)
மெஹபூப் அலி - அம்ரோஹா
ஜோதி லோதி - லலித்பூர்
பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கும்போதே இப்படி திடீரென 5 வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸுக்கு தூக்கி வாரி போட்டியிருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 181 தொகுதிகளில் வெறும் 26க்கு மட்டுமே சமாஜ்வாதி ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருக்கும்போதே.. வேட்பாளர்களை சமாஜ்வாதி அறிவித்திருப்பது காங்கிரஸை கிளப்பிவிட்டிருக்கிறது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்ததற்கு சஹாரன்பூர் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பேச்சுவார்த்தையின்போது வேட்பாளர்களை அறிவிப்பது தன்னிச்சையானது என்றும், அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். பீகார், தமிழ்நாடு என பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதலாக சீட்கள் வாங்கிக்கொண்டு.. குறைந்த தொகுதிகளில் மட்டும் ஜெயிப்பது காங்கிரஸுக்கு பழகிப்போன ஒன்று.
இப்படி இருக்கையில் தற்போது அகிலேஷுடன் எந்த மாதிரியான பேச்சுவார்த்தை யுக்தியை கட்சி எடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
