மோடியின் கோட்டை.. வாரணாசியில் பாஜக தோல்வி.. மீண்டும் வென்று காட்டிய அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியின் எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் தான் வாரணாசி எம்எல்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

samajwadi-party-win-varanasi-mlc-seat-in-uttar-pradesh

உத்தர பிரதேசத்தில் சட்டசபை மற்றும் சட்ட மேலவை உள்ளன. சட்டபை உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் என அழைப்பது போல் சட்டச மேலவை உறுப்பினர்களை எம்எல்சி என சொல்வார்கள்.

உத்தர பிரதேசத்தில் சட்ட மேலவையில் காலியான 11 இடங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வளியாகி உள்ளது.

இதில் வாரணாசியின் ஆசிரியர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் சிட்டிங் எம்எல்சி லால் பிகாரி யாதவ் களமிறங்கினார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரமோத் மிஸ்ரா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதி வேட்பாளர் லால் பிகாரி யாதவ் 4,898 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பிரமோத் மிஸ்ராவை வீழ்த்தினார்.

தற்போது தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் பிரமோஸ் மிஸ்ரா கடந்த 2020ம் ஆண்டில் சுயேச்சையாக களமிறங்கி வெறும் 936 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தற்போது பாஜகவில் களமிறங்கி 4,898 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்து இருப்பது 'தாமரை' கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதேபோல் வாரணாசி பட்டதாரி தொகுதிக்கான எம்எல்சி தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அசுதோஷ் சிங்கா வெற்றி விளிம்பில் உள்ளார். அவரை எதிர்த்து களமிறங்கிய கேதர் நாத் சிங் பின்தங்கி உள்ளார். சற்று நேரத்தில் முழு ரிசல்ட் வெளியாக உள்ளது.

வாரணாசி லோக்சபா எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். கடந்த முறை வாரணாசி ஆசிரியர் தொகுதியில் சமாஜ்வாதியின் லால் பிகாரி யாதவ் வென்ற நிலையில் இந்த முறை எப்படியாவது பாஜக கைப்பற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டியது. ஆனால் நடக்கவில்லை. வாரணாசி பட்டதாரி தொகுதியிலும் பாஜக வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

இப்படி பிரதமர் மோடியின் சொந்த லோக்சபா தொகுதியில் 2 எம்எல்சி தேர்தலிலும் பாஜக பின்தங்கி இருப்பது அந்த கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த எம்எல்சி தேர்தலில் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் போன்று அனைத்து வாக்காளர்களாலும் ஓட்டளிக்க முடியாது. குறிப்பிட்ட தொகுதிக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இதனால் பொதுவாக எம்எல்சி தேர்தல் என்பது வாக்காளர்களின் மனநிலைமை நேரடியாக பிரதிபலிப்பது இல்லை. இருப்பினும் குறிப்பிட்ட பகுதியில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் சவால்களை புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் தற்போது வாரணாசியில் 2 எம்எல்சி தேர்தலிலும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் வென்று இருப்பது பாஜகவினற்காக எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இப்படியான சூழலில் இந்த தேர்தல் வெற்றி என்பது சமாஜ்வாதி கட்சிக்கு உத்வேகம் அளிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+