கன்னியாஸ்திரியாக மாறினால் பூர்வீக சொத்து பறிபோகுமா? அரசு நில இழப்பீடு வழக்கில் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஒரு பெண் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டால், அவருக்கு அப்பாவின் சொத்தில் பங்கு கிடையாதா? குடும்பத்தை விட்டு வேறு இடத்தில் வசித்தால் பூர்வீகச் சொத்தில் உரிமை போய்விடுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு கேரள ஹைகோர்ட் முக்கியமான விளக்கம் ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதி தந்த தீர்ப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. அந்த வழக்கு பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜோஸ் ஏ.எம்.. இவருக்கு 66 வயதாகிறது.. இவரது அப்பாவுக்கு சொந்தமான 3.295 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி விட்டது..

Nun Inheritance Rights Kerala High Court Indian Succession Act

அரசு நிலம் - தந்தையின் சொத்து

இதற்காக ஜோஸ் மற்றும் அவரது 5 சகோதர, சகோதரிகளுக்கு மொத்தம் ரூ.3.74 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த பணத்தை 6 பேருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தனது சகோதரி கன்னியாஸ்திரியாக மாறிவிட்டதால் அவருக்கு சொத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று ஜோஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனது சகோதரிகளில் ஒருவர் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். அதனால் அவருக்கு அப்பாவின் சொத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று ஜோஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அதுமட்டுமல்ல, குடும்ப சொத்தை இத்தனை காலமாக தான்தான் பராமரித்து வந்ததாகவும், அதனால் தனக்கு அதிக பணம் கிடைக்க வேண்டும், மற்ற சகோதர, சகோதரிகள் பெற்றோர் வீட்டை விட்டு வேறு இடங்களில் வசிப்பதால் அவர்களுக்குக் கூடுதல் இழப்பீடும் வழங்கக்கூடாது என்று கறாராக கோர்ட்டில் வாதம் செய்தார்.

நீதிபதி அதிரடி தீர்ப்பு

ஆனால், ஜோஸ் முன்வைத்த இந்த வாதத்தில் ஒன்றைகூட நீதிமன்றம் ஏற்கவில்லை. இறுதியில் நீதிபதி ஜி.கிரிஷ் தன்னுடைய உத்தரவில் சொன்னதாவது:

"ஜோஸ் நிலத்தை பராமரித்து வந்தது உண்மைதான். ஆனால், அவர் தனது சொத்துக்காக மட்டும் அதை செய்யவில்லை. குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சார்பாகவும் பராமரித்து வந்துள்ளார்.. அதேபோல, சகோதர, சகோதரிகள் வேறு இடங்களில் வசிக்கிறார்கள் என்பதற்காக பூர்வீக சொத்தின் மீதான பாசமும் உரிமையும் போய்விடாது..

இன்னொரு சகோதரர் தனது பங்கை விட்டுக்கொடுத்துவிட்டதாக ஜோஸ் சொல்கிறார். இதற்காக 2009ம் ஆண்டு செய்யப்பட்ட குடும்ப ஒப்பந்தத்தையும் காட்டினார். ஆனால், அந்த ஆவணம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. அதனால் அதை வைத்து அந்த சகோதரரின் சொத்துரிமையை மறுக்க முடியாது..

கன்னியாஸ்திரிக்கு சொத்து உண்டா

இந்த வழக்கில் முக்கியமான கேள்வி, கன்னியாஸ்திரியாக மாறிய பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டா என்பதுதான். ஒருவர் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார் என்பதற்காக அவர் சட்டப்படி இறந்தவராகிவிட மாட்டார். அதனால், அவருக்கு அப்பாவின் சொத்தில் இருக்கும் வாரிசுரிமையும் போய்விடாது.. இந்திய வாரிசுரிமைச் சட்டத்திலும் கன்னியாஸ்திரிகளுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று எந்தத் தடையும் இல்லை.

இதற்கு முன்பு சுப்ரீம்கோர்ட்டும், கேரள ஹைகோர்ட்டும் இதே போன்ற தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. அதனால், ஜோஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.. ரூ.3.74 கோடி இழப்பீட்டை 6 பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவையும் உறுதி செய்கிறேன்" என்று நீதிபதி ஜி. கிரிஷ் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+