12 கோடி வீட்டை விற்கும் அனுஷ்கா? திடீரென என்ன ஆச்சு? சினிமாவுக்கும் குட் பை! காரணம் இதுதானா?
சென்னை: அனுஷ்கா ஷெட்டி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அருந்ததி படத்தில் அவர் காட்டிய அந்த மிரட்டலான நடிப்புதான். அதற்கு பிறகு பாகுபலி படத்தில் தேவ சேனையாக வந்து இந்தியா முழுவதும் ரசிகர்களை கட்டிப்போட்டார். இப்படி ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா இப்போ படங்களில் பெரிதாக தலை காட்டாமல் இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இதற்கிடையே அவர் ஹைதராபாத்தில் வைத்திருக்கும் 12 கோடி மதிப்புள்ள வீட்டை விற்க போவதாக வெளியாகி இருக்கும் தகவல், அவர் சினிமாவை விட்டு விலகுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அனுஷ்கா கடைசியாக நடித்த படங்கள் எதிர்பாத்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் அவர் முன்பு இருந்த மாதிரி தொடர்ந்து படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்கள். மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி படத்துக்குப் பிறகு காட்டி படத்திலும் நடித்திருந்தார். ஆனாலும் அடுத்தடுத்து புதிய படங்கள் குறித்து அறிவிப்புகள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை.

வீட்டை விற்கும் அனுஷ்கா
இதனால் அனுஷ்கா மீண்டும் எப்போது ஒரு பெரிய படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிஜி ஹில்ஸ் பகுதிகளில் அவர் வைத்திருக்கும் சொகுசு வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் வாங்கிய இந்த வீட்டின் மதிப்பு இப்போ 12 கோடி என்று சொல்லப்படுகிறது.
இப்போது அந்த வீட்டை விற்கப் போகிறார் என்று செய்தி வெளியானதும் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கும் என்று பலரும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். ஒருவேளை சினிமாவை விட்டு அனுஷ்கா விளக்கப் போகிறாரா என்றும் சிலர் பீலிங்கோடு கருத்து தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அனுஷ்காவுக்கு கல்யாணம் என்று பல வருடங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போ கூட அந்த விஷயத்தைத்தான் சொல்கிறார்கள்.
பின்னணி காரணம்
அனுஷ்கா கல்யாணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆக போவதால் இந்த வீட்டை விற்க போகிறார் என்று கூறி வருகிறார்கள். அனுஷ்காவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகவே இருக்கிறது. அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்து ரசிகர்கள் அந்த படத்திற்காக எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பாக அருந்ததி, பாகுபலி போன்ற படங்களுக்கு பிறகு அவருக்கு கிடைத்த வரவேற்பு இன்னும் குறைவில்லை.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதனால் தான் அவர் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற தகவலை ரசிகர்களால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் அனுஷ்கா நான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் கொடுக்கவில்லை. அதனால் கொஞ்சம் அமைதியாக இருங்க, ஏற்கனவே வதந்திக்கும் அனுஷ்காவுக்கும் ரொம்ப நெருக்கம்.. ஒவ்வொரு மாதமும் அவரைப் பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பி கொண்டே இருக்கும். அதேபோல இதுவும் இருக்கலாம் என்று அவருடைய ரசிகர்களே விளக்கமும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இன்னும் அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications
