விப்ரோ - இன்போசிஸ் ஐடி லிவ் இன் ஜோடிக்குள் நுழைந்த அடுத்த பெண்.. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்தது என்ன
சென்னை: 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார் அந்த பெண். காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், வேறொரு பெண்ணுடன் காதலனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகம், கடைசியில் ஒரு இளம் பெண்ணின் உயிரையே பறித்துள்ளது. அதன்பிறகு அந்த இளைஞர் செய்த காரியம்தான் இந்த சம்பவத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அப்படி என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஹிஞ்சேவாடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்த பெண்ணின் பெயர் கோமல் ராஜேந்திர தஹாகே. வயது 27. இவர் வார்தா மாவட்டத்தை சேர்ந்தவர். புனேவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

விப்ரோ & இன்போசிஸ்
இவருக்கு ஷுபம் தியானேஷ்வர் கல்பாண்டே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் புல்தானா மாவட்டத்தை சேர்ந்தவர். இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2 பேருக்குமே டேட்டிங் ஆப் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதற்கு பிறகு 2 பேருமே 3 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்துள்ளனர்... திருமணம் செய்யாமல் ஒன்றாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் 2 வீட்டினருக்கும் தெரிந்திருந்தது. பிறகு திருமணம் செய்து வைக்க 2 பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், கடந்த 2 முதல் 3 மாதங்களாகவே காதல் ஜோடிக்கிடையே நிறைய தகராறுகள் நடந்துள்ளன.. அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது... இதற்கு காரணம், ஷுபம் வேறொரு பெண்ணுடன் தவறாக பழகி வருவதாக கோமல் சந்தேகப்பட்டுள்ளார்.. இதனால் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்..
விடிய விடிய சண்டை
இதுதொடர்பாகவே இவர்களுக்குள் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஷுபத்தின் செல்போன் மற்றும் சோஷியல் மீடியா போஸ்ட்களை பார்த்து, கோமல் டென்ஷனாகி நிறைய கேள்விகளை ஷூபுவிடம் கேட்டுள்ளார்..
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். பிறகு கோமல் தங்கியிருந்த பி.ஜி. ஹாஸ்டலுக்கு இருவரும் திரும்பியுள்ளனர். அங்கு மறுபடியும் நள்ளிரவு 12.30 மணிக்கு 2 பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் தொடங்கிய தகராறு அதிகாலை 3 மணி வரை நீடித்தது..
சடலம் பக்கத்திலேயே காதலன்
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஷுபம், கோமலை சரமாரியாக தாக்கி விட்டா.. அவரது முகத்தில் பலமுறை குத்தியதுடன், தலையை சுவரிலும் மோதியிருக்கிறார். இதனால் கோமல் படுகாயமடைந்து ரத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.. இரவு முழுவதும் கோமலின் சடலம் பக்கத்திலேயே ஷுபம் இருந்துள்ளார்..
கோமல் இறந்த நொடியிலிருந்து, விடிகாலை வரை அவர் அழுதுகொண்டிருந்தாராம்..
மறுநாள் காலையில் கோமலின் அம்மா அவருக்கு போன் செய்துளளார்.. ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அம்மா, புனேவில் வசிக்கும் உறவினரிடம் தகவல் தெரிவித்து, நேரில் சென்று பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்.
அசைவில்லாத தோழி
இதனிடையே, காலை 6.30 மணியளவில் ஷுபம் 112 எமர்ஜென்சி நம்பருக்கு போனை போட்டு, என்னுடைய தோழி எந்த அசைவும் இல்லாமல் கிடக்கிறார், உடனே ஆம்புலன்ஸ் அனுப்புங்க என்று கேட்டுள்ளார்.. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கோமலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.
இதையடுத்து ஷுபத்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கோமலை அடித்தே தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டாராம்.. பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கோமலின் ரூம்மேட், ஹாஸ்டலில் தங்கியிருந்த மற்றவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. 3 ஆண்டுகளாகக் காதலித்து, திருமணம் செய்துகொள்ள 2 வீட்டினரும் சம்மதித்திருந்த நிலையில், இந்த உறவு கொலையில் முடிந்திருப்பது புனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!!


Click it and Unblock the Notifications
