காங்கிரஸ் நிர்வாகி மீது குரோஷி மனைவி புகார்.. 2 வருஷத்துக்கு முன்பு நடந்த சம்பவம்.. இப்போ கம்ப்ளைன்ட்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான குரோஷி மனைவி ரிஸ்வானா, காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் என்பவர் மீது 10 லட்சம் பணம் மோசடி செய்து விட்டார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே அரசியல் பிரபலங்கள் மீது சமீப காலமாக புகார்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த விஷயமும் இப்ப இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
குரோஷி மனைவிக்கு அவசர பண தேவை ஏற்பட்டபோது தன்னிடம் இருந்த தங்க நகைகளை வைத்து பணம் வாங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். இதற்காக நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, ரஞ்சன் குமார் நகைகளை நல்ல விலைக்கு விற்று கொடுப்பார் என்று சொல்லி இருக்கிறார்கள். அவரை நம்பி நகைகளை கொடுத்த நிலையில் எதிர்பார்த்த பணம் முழுமையாக கிடைக்கவில்லை என்பதுதான் இப்போது புகாராக மாறி இருக்கிறது.
குரோஷி மனைவி புகார்
ரிஸ்வானா கொடுத்த புகாரின், "கடந்த 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி 92.73 கிராம் தங்க நகைகளை விற்பனைக்காக ரஞ்சன் குமாரிடம் கொடுத்திருந்தேன். அந்த நகைகளை விற்று 14 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் முதலில் 4 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள 10 லட்சத்தை கொடுக்காமல் இழுத்து அடித்ததாக"கூறியிருக்கிறார்.
பலமுறை மீதம் உள்ள பணத்தை கேட்டும் கிடைக்காததால் கடைசியில் இரண்டு வருடம் கழித்து, சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். தன்னுடைய நகைகளை விற்றதில் வரவேண்டிய பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டிருக்கிறார். இதை அடுத்து இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்
அதே சமயம் இந்த விசாரணை பற்றி ரஞ்சன் குமார், "கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மை இல்லை, சட்டப்படி இதை எதிர் கொள்ள போகிறேன்" என்று விளக்கமளித்திருக்கிறார். அதனால் இப்போது இருதரப்பு கருத்துக்களும் வெளியாகி உள்ள நிலையில் போலீஸ் விசாரணைக்கு பிறகு தான் இந்த விவாகரத்தில் உண்மை என்ன என்பது தெரிய வரும்.
சர்ச்சையில் பிரபலங்கள்
ஏற்கனவே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது கலெக்டர் கொடுத்த புகார், அதுபோல பிக் பாஸ் பிரபலமான முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் கொடுத்த புகார் என இப்போது சோஷயல் மீடியாவில் சின்னத்திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் மீது புகார்கள் குவிந்து வருகிறது. அதனாலயே இதைப்பற்றி அதிகமான விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது. விஜய் டிவி தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமான குரோஷியை பலருக்கும் தெரிந்திருந்தாலும், இப்போது அவருடைய மனைவியின் பண மோசடி குற்றச்சாட்டு பற்றி பலரும் விவாதித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
