கர்நாடகாவில் மிதக்கும் சூரிய மின் திட்டம்: புதிய முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 1,500 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகளில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்த புதிய புதிய முயற்சியில் தமிழகத்தை சேர்ந்தவரும், கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜேந்திர சோழன் இறங்கியுள்ளார்.

நிலப்பரப்பின் தேவையைக் குறைத்து, நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பைப் பயன்படுத்தி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியில் கர்நாடகம் கவனம் செலுத்தி வருகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் மொத்தம் 1,500 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் திட்டங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய கர்நாடக மின் கழகம் (KPCL) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக நீர்த்தேக்கங்களின் தன்மை, ஆழம், நீர்மட்ட மாற்றங்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசனைச் சேவைகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

solar power

திட்டத்தின் பின்னணியில் உள்ள சவால்கள்

மிதக்கும் சூரிய மின் நிலையங்களில், நீரின் மேற்பரப்பில் மிதக்கக்கூடிய பிரத்யேக கட்டமைப்புகளில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதனால் பெரிய அளவில் புதிய நிலப்பரப்பைப் பயன்படுத்த வேண்டிய தேவையைக் குறைக்க முடியும்.

ஆனால் அதேசமயம் இத்தகைய மின் நிலையங்களை அமைப்பது சாதாரணமான பணியல்ல. நீர்த்தேக்கத்தின் ஆழம், பருவகால நீர்மட்ட மாற்றங்கள், காற்றின் தாக்கம், மிதக்கும் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் கட்டமைப்புடன் இணைக்கும் வசதிகள் அனைத்தும் முக்கியமானவை.

இதுகுறித்து கர்நாடக மின் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பி. ராஜேந்திர சோழன் ஐஏஎஸ் கூறிய கருத்து, திட்டத்தின் தொழில்நுட்ப முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. ராஜேந்திர சோழன் ஐஏஎஸ் இது குறித்து கூறியதாவது:-

"மிதக்கும் சூரிய மின் திட்டங்களை உருவாக்குவதற்கு விரிவான பொறியியல் ஆய்வுகள் அவசியம். குறிப்பாக நீர்த்தேக்கங்களின் ஆழ அமைப்பு, நீர்மட்ட மாற்றங்கள், மிதக்கும் கட்டமைப்புகளை நிலைநிறுத்தும் முறைகள் மற்றும் மின்சாரத்தை வெளியேற்றும் வசதிகள் ஆகியவற்றைத் துல்லியமாக மதிப்பிட வேண்டும்" என்று ராஜேந்திர சோழன் தெரிவித்துள்ளார்.

ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை

மேலும் அவர் கூறும் போது, "இந்தத் திட்டத்தின் மூலம் பொருத்தமான நீர்த்தேக்கங்களை அடையாளம் காண்பது, ஒவ்வொரு இடத்திலும் சாத்தியமான மின் உற்பத்தித் திறனை மதிப்பிடுவது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நம்பகமான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவெடுக்க முடியும்" என்றும் ராஜேந்திர சோழன் விளக்கியுள்ளார்.

இதன் மூலம் மிதக்கும் சூரிய மின் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகளின் அடிப்படையில் திட்டமிடுவதற்கு கர்நாடக மின் கழகம் முக்கியத்துவம் அளிப்பது தெளிவாகிறது.

யார் இந்த ஐஏஸ் அதிகாரி?

தமிழ்நாட்டின் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்திர சோழன், மின்பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்விப் பின்னணியைக் கொண்டவர். 2008 ஆம் ஆண்டு கர்நாடகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், BESCOM, HESCOM உள்ளிட்ட மின் விநியோக நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்த அனுபவம் பெற்றவர்.

தற்போது கர்நாடக மின் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், பெங்களூர் பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையத்தின் பெருநகர ஆணையராகவும் பணியாற்றி வருகிறார். மின் விநியோகத் துறையில் பெற்ற அனுபவத்துடன், மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான நிர்வாகப் பொறுப்புகளையும் அவர் கவனித்து வருகிறார்.

பசுமை மின்சார உற்பத்திக்கு புதிய வாய்ப்பு

கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை அதிகரிக்க நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மிதக்கும் சூரிய மின் திட்டங்கள் நிலத்தின் தேவையைக் குறைப்பதுடன், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நீர் ஆவியாதலையும் குறைக்கக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளன.

எனினும், இத்தகைய பலன்களை ஒவ்வொரு நீர்த்தேக்கத்தின் சூழ்நிலைக்கேற்ப மதிப்பிட வேண்டியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 1,500 மெகாவாட் என்பது தற்போது ஆய்வுக்குட்படுத்தப்படும் சாத்தியமான மொத்தத் திறனாகும். திட்டங்களின் இறுதி இடங்கள், முதலீடு, உற்பத்தித் திறன் மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு ஆகியவை ஆய்வு முடிவுகள் மற்றும் தேவையான அனுமதிகளுக்குப் பிறகே தீர்மானிக்கப்படும். நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்தி பசுமை மின்சார உற்பத்தியை விரிவுபடுத்தும் இந்த முயற்சி, கர்நாடகத்தின் எதிர்கால எரிசக்தித் திட்டமிடலில் குறிப்பிடத்தக்க வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+