பீஸ்ட் மோடில் விருச்சிக ராசி.. தொழிலில் ராஜயோகம்.. ராகு கேது தரும் அதிர்ஷ்டம்
Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது விருச்சிக ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் பயமே அறியாதவர்கள். ராகு கேது பெயர்ச்சியால் இன்னும் பயம் தெரியாத அளவுக்கு சூழல் அமையும். 3 ஆம் இடத்திற்கு ராகு வந்து அமருவதால் நினைத்த காரியத்தை சாதித்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும்.

தொழிலில் அதிர்ஷ்டம்
சோஷியல் மீடியா, மார்க்கெட்டிங் ஏஜென்சி, மாடலிங் ஏஜென்சி, ஐடி செக்டார், மீடியா செக்டார், பிரிண்ட் மீடியா, மீடியா துறை, ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான யோகம் ஏற்படும். செய்து முடிக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படும். திட்டமிட்ட விஷயங்களை அடைந்தே தீருவீர்கள். இளைய சகோதர, சகோதரிகளுடன் பகை ஏற்படும். அவர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும்.
ஆரோக்கியம்
பாக்கியத்தில் கேது வருவதால் சிறுநீரகப் பாதை, கிட்னி செயல்பாடுகள், இடுப்பு, புட்டம், ஆசனவாய் பிரச்சனை, மலச்சிக்கல், தொடைப் பகுதிகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம், செட்டிலாகும் யோகம் ஏற்படும். வீட்டில் நெருக்கமான நபர்கள் உங்களை விட்டுப் பிரியக்கூடிய அமைப்பு உள்ளது.
யோகம்
ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள், வெளியூரில் பணிபுரிபவர்களுக்கு, தெரியாத இடங்களில் உள்ளவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு மாறும் யோகம் ஏற்படும். அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. டெஸ்ட் டியூப் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சுயமாக தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
ஏற்றமதி செய்வதற்கான வாய்ப்பு, பிராண்டிங் தொழில் செய்வதற்கான வாய்ப்புள்ளது. ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. சந்தோஷம் கண்டிப்பாக அதிகமாக இருக்கும். 85 சதவீதம் சந்தோஷம் கண்டிப்பாக இருக்கும். பண வரவும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ராமேஸ்வரம் சென்று வழிபாடு செய்து வருவது ஏற்றத்தைத் தரும். அங்கு கடற்கரையில் குளித்துவிட்டு பர்வதவர்த்தினி அம்பாள், சிவனை வழிபாடு செய்வது சகலவித நன்மைகளைத் தரும்.


Click it and Unblock the Notifications
