10 வருட காதலுக்காக பிரியா பவானி சங்கர் செய்த செயல்.. நடிகை ரச்சிதா கமெண்டில் வெடிக்கும் விவாதம்
சென்னை: நேற்று நவம்பர் 11ஆம் தேதி ரொம்பவும் ஸ்பெஷலான நாளாகவே இருந்தது. சிங்கிள்ஸ் டே அதுவுமாக பல பிரபலங்கள் திருமணங்கள் செய்திருந்தனர். அதில் பலரையும் வியக்க வைத்தது பிரியா பவானி சங்கரின் திருமணம்தான். 10 வருட காலமாக காதலித்து வந்த தனது காதலர் ராஜ வேலுவை எளிமையாக திருமணம் செய்து இருந்தார். அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி போட்ட போஸ்டுக்கு நெட்டிசன்கள் சிலர் மோசமான கமெண்டுகள் கொடுத்து வருகிறார்கள்.

எளிமையான திருமணம்
நேற்று அனிருத் காவ்யா மாறன் திருமணம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிரீஸில் நடைபெற்றது. ஆனால் பெரிதாக வெளியே தெரியாத வகையில் எளிமையாக ப்ரியா பவானி சங்கரின் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொண்டது போல இல்லை. இருவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். சிவப்பு கலரில் எளிமையான ஒரு புடவையில் தேவதை போல பிரியா பவானி சங்கர் இருந்தார். பெரிதாக அணிகலன்கள் எதுவும் அணிந்து கொள்ளவில்லை. அதுபோல மேக்கப்பும் அவர் அதிகமாக போடாதது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை ரச்சிதா சொன்ன வாழ்த்து
பிரபலங்கள் என்றால் விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் போட்டுக்கொண்டு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி பலரையும் மிரள வைப்பார்கள். ஆனால் பிரியா பவானி சங்கர் அப்படி இல்லையே ரொம்பவும் எளிமையாக இருந்திருக்கிறாங்க என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அவர் தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் நேற்று போஸ்ட் போட்டு இருந்தார். உடனே ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பிரியாவிற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். அந்த வரிசையில் பிக் பாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் "பைனலி" என்று ஹாட் சிம்பலும் கொடுத்திருந்தார்.

நெட்டிசன்களின் கமென்ட்
வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல அந்த கமெண்ட் போட்டு இருந்தார். ஆனால் அதற்கு சில மோசமான கமெண்டுகள் வந்திருக்கிறது. "உண்மையான காதல் என்றால் என்னவென்று புரிந்து கொள்" என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னொருவரோ "உங்களுக்கு கல்யாணம் எப்போ?" என்று அவரை கிண்டல் செய்து இருக்கிறார். அதுபோல இன்னொருவர் சொல்ல முடியாத அளவிற்கு மோசமான ஆபாசமான ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். இப்படி பல கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இதற்கு ரச்சிதா என்ன பதில் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. திருமணத்திற்கு வாழ்த்து சொன்னது குத்தமா? அதற்காக இப்படியா ஆபாசமாக பேச வேண்டும் என்று ரச்சிதாவுக்காக ரசிகர்கள் திட்டியும் வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
