சைலண்ட் கில்லர் ஸ்நேக்ஸ்.. தமிழ்நாட்டின் டாப் 5 ஆபத்தான பாம்புகள்.. கடித்தால் கயிறு கட்டலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாம்புகள் நடமாட்டம் என்பது கிராமப்புறங்களில் மட்டுமல்ல, மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகிலும் காணப்படுகிறது. குறிப்பாக சில விஷப்பாம்புகள் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே அதிகம் நடமாடுகின்றன. அப்படி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 5 முக்கிய விஷப்பாம்புகள் எவை? அவை ஏன் வீடுகளைத் தேடி வருகின்றன? பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் 4 முக்கிய விஷப்பாம்புகள் உள்ளன. அவை நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன். இந்த 4 பாம்புகளும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் எலிகள்.

Venomous Snakes

நச்சுள்ள பாம்பு என்னென்ன

வீடுகள், தானியக் கிடங்குகள், குப்பைகள் நிறைந்த பகுதிகளில் எலிகள் அதிகம் இருக்கும். எலிகளை உணவாக கொள்ளும் பாம்புகள் அவற்றை தேடி வீடுகளுக்கு அருகில் வரக்கூடும். அதனால்தான் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க சொல்கிறார்கள்.. பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடங்கள், பரண்கள், பயன்படுத்தப்படாத அடுக்குகள், இடுக்குகள், மண் அடுப்புகள், விறகுகள் இப்படி எங்கு வேண்டுமானாலும் பாம்புகள் வந்து தங்கலாம்.

இதில் நல்ல பாம்பு கொடிய விஷம் கொண்டது.. படமெடுத்து நிற்கும் இந்தப் பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். இதனால் உடல் தசைகள் செயலிழந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம்.

டாப் 5 ஆபத்தான பாம்புகள்

கட்டுவிரியன் பாம்புகள், பெரும்பாலும் இரவு நேரத்தில் நடமாடும். சில நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கடிக்கலாம். இதன் விஷம் நரம்புகளை பாதித்து மூச்சுத் தசைகளையே செயலிழக்கச் செய்யும்.

கண்ணாடி விரியன் பாம்புகளின் உடலில் வட்ட வடிவிலான அடையாளங்களை கொண்டிருக்கும். இதன் விஷம் ரத்தம் உறையும் தன்மையைப் பாதிக்கும். உட்புற ரத்தக்கசிவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

சுருட்டை விரியன் பாம்புகள், பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானது. இதன் கடியால் ரத்தம் உறைவதில் பாதிப்பு ஏற்பட்டு உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படலாம்.. அதேபோல மூக்கு விரியன் என்ற பாம்புகளும் ஆபத்தானவையே.. இந்த பாம்பின் மூக்கு பகுதியில் சற்று உயர்ந்த அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் கடியால் கடுமையான வலி, வீக்கம், ரத்தம் உறைவதில் பாதிப்பு, சில நேரங்களில் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படலாம்.

மலைப்பிரதேசங்களில் பாம்புகள்?

தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடி சம்பவங்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் நஞ்சற்ற பாம்புகளால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 5 சதவீத சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன் போன்ற விஷப்பாம்புகள் காரணமாக இருக்கின்றன.

தேனி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் பாம்புக்கடியால் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகமாக இருந்தாலும், உயிரிழப்புக்கு மருத்துவமனைக்குச் செல்லும் நேரம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்

பாம்பு கடித்த உடனேயே கை வைத்தியம் பார்க்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஏனென்றால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பாம்புக்கடிக்கு தேவையான ASV எனப்படும் விஷ முறிவு மருந்து வழங்கப்படுகிறது. அதன்பிறகு பாதிக்கப்பட்டவரின் நிலையைப் பொறுத்து உயர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த மருந்தை செலுத்துவதற்கு முன்பாக, பரிசோதனைக்காக சிறிய அளவு மருந்து செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவில் பயன்படுத்தப்படும் ASV மருந்து முக்கியமான நான்கு விஷப்பாம்புகளின் விஷத்தை எதிர்கொள்ளும் வகையிலேயே தயாரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் ரத்தப் பரிசோதனை மற்றும் நோயாளியின் உடல்நிலையைப் பார்த்து அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும்.

எனவே, பாம்பு கடித்தால் நேரத்தை வீணாக்காமல் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். காயத்தை வெட்டுவது, விஷத்தை வாயால் உறிஞ்சுவது, கயிறு கட்டுவது போன்ற கை வைத்தியங்களை செய்யக் கூடாது. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+