தாராபுரம்: முன்னாள் முதல்வர் ஸ்டாலினை ஸ்வீட் அங்கிள்ன்னு சொல்றாரு, அதனால நான் அவரை தம்பி விஜய் என அழைப்பதில் தவறில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில், "தேர்தலுக்கு நேரத்தில் குழந்தைகளை பார்த்து சொன்னார், யாராவது குழந்தைகளை தேர்தல் பரப்புரையில் பயன்படுத்துவார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதையும் தம்பி விஜய் செய்தார்.
குழந்தைகளை பார்த்து வீட்டில் அடம்பிடியுங்கள், அம்மா அப்பாவிடம் அழுங்கள், சாக்லேட் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது போன்று மாமா விஜய்க்கு வாக்கு செலுத்த சொல்லுங்கள் என்று சொன்னார். இன்று ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு அந்த குழந்தைகளின் நிலைமை என்னவென்று பாருங்கள். ஊர் முழுக்க டெங்கு காய்ச்சல், 18,000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலின் காரணமாக உயிர் இழந்திருக்கிறது. எத்தனை குழந்தைகள் இந்த ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். நேற்று மதுரையில் ஒரு 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியிலே தூக்கி எறியப்பட்டான். அந்த சிறுவனுக்கு அவருடைய பெற்றோர்கள் நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடியபோது காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அவர்களை அடித்து கழுத்தில் மிதித்து போராடக் கூடாது என்று கண்டித்தார்கள். இதுதான் உங்களுக்காக பேசிய குழந்தைகளுக்கு செய்யக் கூடிய நன்றிகடனாக உள்ளது. இன்று தங்க மோதிரம் போடுகிறேன் என்று சொல்கிறீர்கள். மருத்துவமனையில் பிறக்கக்கூடிய குழந்தைகளை காப்பாற்றக் கூடிய முக்கியமான மருந்துகள் இல்லை என்கிற நிலையில் மக்கள் தங்க மோதிரம் வாங்குவதற்கு தள்ளப்படுகிறார்கள். ஐபிஎல் போட்டியில் குழந்தைக்கு மாத்திரை தூள் செய்கிறார். அவரை ரத்த பரிசோதனை செய்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாக மக்கள் மீதும், இளைஞர்கள் மீதும் அக்கறை இருக்கிறது என்று நான் நம்பியிருப்பேன். இன்றுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என யாராவது சொல்லுங்கள். ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு பெண் உங்கள் கட்சி நிர்வாகிகள் மீது புகார் தெரிவிக்கிறார். என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள், அதற்கு உறுதுணையாக இருந்தது உங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னார்கள். அவர் சட்டமன்ற உறுப்பினர் பெயர் சொன்ன பிறகு அந்த புகார் அளித்த பெண்ணை மிரட்டி இன்று புகாரை திரும்பப்பெற வைத்திருக்கிற ஆட்சி தூயசக்தி தவெக ஆட்சி. இத்தனை அயோக்கியத்தனங்களை செய்துவிட்டு இன்று மக்களிடம் வாக்கு கேட்கக் கூடிய தைரியம் எங்கிருந்து வந்தது தம்பி விஜய். எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றுவேன் என்று தேர்தலுக்கு முன் சொன்னார். தண்ணீர் சரியான நேரத்தில் திறந்துவிடுவதில்லை. இங்கு உள்ள அமராவதி அணையில் இருந்து சரியான நேரத்தில் திறக்காமல் காசு கொடுத்து தண்ணீர் பெற்று தென்னை மரங்களுக்கு பாய்ச்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு விதமாக சட்ட ஒழுங்கு, மக்கள் நலன், தேர்தல் வாக்குறுதிகள் என்று எதையும் நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வருவதற்கு முன் உங்களுக்கு மின்சார கட்டணம் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று மின்சாரமே இல்லை. அதற்கு காரணங்கள் காத்து இல்லை, மழை இல்லை, பள்ளம் தோண்டிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த ஃபியூஸ் எடுத்தவர்களை இன்னும் கண்டுபிடிக்காமல் என்ன ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்களால் ஆட்சி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள முடியாவிட்டால் யாரிடமாவது ஆட்சியை கொடுத்துவிட்டு போங்கள். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தான் திமுக என்று விஜய் புதிதாக ஒன்றை கண்டுபிடித்துள்ளார். பிரதமர் எதிராக கருப்பு கொடியை காட்டியவர்கள் திமுக, சிஏஏவை எதிர்த்தவர்கள் திமுக, இப்படி ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்தவர்கள், எதிர்த்து போராடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். ஆனால் நீங்கள் இதுவரை ஏதாவது எதிர்த்து பேசியுள்ளீர்களா தம்பி விஜய் திருமாவளவனின் இயக்கத்தை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு சட்டமன்றத்தில் மோடியை பற்றி விமர்சனம் செய்தபோது "பேசாதீர்கள், இங்குவேண்டாம், இதையெல்லாம் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது" என்று அவை குறிப்பில் இருந்து நீக்க சொன்னது நீங்களா நாங்களா. பச்சை துண்டு போட்டுக்கொண்டாலே விவசாயிகளை பற்றி புரிந்துகொண்டீர்கள் என்பது பொய். ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டீர்கள் என்றால் அந்த இடத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நிஜ வாழ்க்கையிலும் கொண்டு வந்துவிடலாம் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றியது போதும். தயவுசெய்து தமிழ்நாட்டை உங்கள் பிடியில் இருந்து விடுதலை செய்யுங்கள். தமிழ் மக்களை விடுதலை செய்யுங்கள். தமிழ்நாட்டை சுயமரியதையோடு தமிழ் மொழியை காப்பாற்றும் ஒரு இனமாக, தன்மானதோடு வாழக்கூடிய இனமாக, வளர்ச்சியை நோக்கி செல்லும் ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும் என்றால் இந்த ஆட்சியை அகற்றப்படவேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.