பாத்ரூமில் யார் எவ்வளவு நேரம் உட்காருராங்கன்னு கணக்கெடுக்க ஒரு அமைச்சரா? நிர்மலை வாரிய உதயநிதி

  • சென்னை: தமிழகத்தில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கணக்கெடுக்க ஒரு அமைச்சரா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சட்டத்துறை, எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது நிர்மல் குமாருக்கும் உதயநிதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

    Advertisement

    சட்டசபையில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

    Advertisement

    அவர் கூறுகையில் மின்சாரத் துறை தவெக ஆட்சியில் சரிவர நிர்வகிக்கவில்லை என்றார். உடனே இதற்கு பதில் சொல்ல நிர்மல் குமார் எழுந்தார். அவர் எழுந்து, "கடந்த 5 ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகளை சொல்கிறேன்" என பேச ஆரம்பித்தார். அப்போது செந்தில் பாலாஜி குறித்து ஏற்கெனவே விஜய் கரூரில் சொன்ன ஒரு வார்த்தையை (அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்) குறிப்பிட்டுவிட்டு உடனே சாரி சாரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என குறிப்பிட்டார்.

    உடனே திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்மல் குமார் அந்த வார்த்தையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும் அந்த வார்த்தை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது.

    Advertisement

    அப்போது எழுந்த உதயநிதி ஸ்டாலின், "மாண்புமிகு சங்கி அமைச்சர்.. சாரி சாரி மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சர்" என குறிப்பிட்ட போது நிர்மல் குமார் கடும் கோபமடைந்தார். அவர் "மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்.." என எங்களுக்கு சொல்ல 5 நிமிடம் கூட ஆகாது.

    அவர்கள் தவறாக பேசினால் எங்களுக்கும் பேச தெரியும் என்றார். இதனால் மேலும் கடுப்பான உதயநிதி, "தமிழகத்தில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஒரு அமைச்சரை வைத்திருக்கிறீர்ளா என நான் கேட்க விரும்புகிறேன். முதலில் யார் தவறாக பேசினார்கள் என்பது பேரவைத் தலைவராகிய உங்களுக்கு தெரியும்" என்றார்.

    Advertisement

    இதற்கு பதில் சொல்ல ஆதவ் அர்ஜுனா எழுந்த போது திமுகவினர் கூச்சலிட்டனர். அப்போது ஆதவ், "நான் பேசுவதை கேட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேசட்டும்" என கூறிவிட்டு ஒரு வார்த்தையை சொன்னார், அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    இதற்கு பதில் சொன்ன உதயநிதி ஸ்டாலின், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளி விவரத்துடன் கேள்வி எழுப்பினார். யார் முதலில் தவறாக பேசினார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்றார்.

    இதையடுத்து அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியில் மின்சாரத் துறையில் 4 அமைச்சர்கள் இருந்தனர். அதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆட்கள் வேலைக்கு எடுப்பதில் குழப்பம் நிலவியது. 15 ஆயிரம் பேர் ஓய்வு பெற்ற நிலையில் வெறும் 343 பேர் மட்டுமே பணிக்கு எடுத்துள்ளனர். நிர்வாக அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார். இதனால் சட்டப்பேரவை களேபரமாக மாறியது. அப்போது செந்தில் பாலாஜி, தவெக ஆட்சியில் எந்த அமைச்சரவையும் மாற்ற மாட்டோம் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா, அமைச்சரவை மாற்றுவது என்பதெல்லாம் முதல்வரின் தனிப்பட்ட உரிமை என செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

    English Summary

    Nirmal Kumar Vs Udhayanidhi stalin: whether a minister's job is to check how long people spend their time in bathrooms?