மிசாவை பார்த்த திமுகவை தோற்கடித்தவர்கள் நாங்கள்.. உதயநிதிக்கு ஆதவ் பதிலடி

  • சென்னை: சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசும் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருவதாகவும், முதல்வர் தன்னிடம் இருப்பதாகக் கூறிய 3 ஆவணங்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறார் என்றும், ஃபைல்களை திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மிசாவை பார்த்த திமுகவை தோற்கடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றவர்கள் நாங்கள் என்று கூறி பதிலடி கொடுத்தார்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும் சட்டத் துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். அவைக் குறிப்பில் இருந்து அவற்றை சரியாக நீக்கிவிடுகிறீர்கள்.

    Advertisement

    சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சியினர் பேசுவதைவிட ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் பேசுவதை அவைக் குறிப்பில் இருந்து நிறைய நீக்கி வரலாறு படைத்துள்ளீர்கள். இந்த அவை நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அதிசயப்படும் அளவிற்கும், ஆச்சரியப்படும் அளவிற்கும் பதில்களை கொடுக்கிறார்கள்.

    நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் தன்னுடைய மேசையில் 3 ஆவணங்கள் இருப்பதாகவும், அதை திறக்க வைத்துவிடாதீர்கள் எனவும் எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் கூறியிருந்தார். தயவு செய்து முதல்வர் அந்த ஃபைல்களை திறந்து பார்க்க வேண்டும். அதன் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Advertisement

    எதற்காக பயப்படுகிறீர்கள், எதற்காக காலதாமதம் செய்கிறீர்கள். இதையே 3 மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஃபைல்களை திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா. நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: மிசாவை பார்த்த திமுக இயக்கத்தை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று தவெக என்றால் என்ன என்பதை காண்பித்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்தவித பயமும் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். முதலமைச்சர் அலுவலகத்தில் அனைத்தும் கோப்புகளாக உள்ளன. தவறுகள் மீது ஆதாரத்துடன் தகுந்த நேரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் முதல்வர் அன்று சொல்ல வந்தார்.

    Advertisement

    கடந்த ஐந்தாண்டுகளில் இவர்கள் என்ன ரீல்ஸ் விட்டார்கள், பாட்டு பாடினார்கள் என்பது பற்றி பாராளுமன்றத்திலேயே பதிவு உள்ளது. பெரியார், அண்ணா பெயரை கூறி திமுக எம்பிக்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை. யார் பெயரைக் கூறி பதவி ஏற்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யவில்லை. நேரலை செய்து வெளிப்படையாக சட்டப் பேரவையை நடத்தக் கூடிய தைரியம் திமுகவுக்கு இதுவரை இருந்ததில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக மக்கள் ஆட்சியை நிலைநாட்டி, ஜனநாயகத்தை காக்க நேரலை செய்து வருகிறோம் என்றார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில் சட்டப் பேரவை நேரலை செய்யப்படும் என்று கூறினீர்களே ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    இதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டப் பேரவையில் முதல்முதலில் கேள்வி நேரத்தை நேரலை செய்தது திமுக தான் என்று கூறினார்.

    English Summary

    Udhayanidhi Stalin questioned the delay in acting on three files and asked if the Chief Minister needed an astrologer to open them. Responding to this, TVK functionary Aadhav Arjuna hit back, stating that they had defeated the DMK—a party that had faced the MISA era—and emerged victorious as the single largest party.