வியட்நாம் படகு விபத்து! சிறப்பு அதிகாரி சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ்! விஜய் டிக் அடிக்க காரணம்! யார் இவர்?

  • டெல்லி: வியட்நாம் படகு விபத்தில் பலியான தமிழர்களின் உடலை மீட்கவும் அங்கு காயமடைந்த தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும் சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ்ஸை சிறப்பு அதிகாரியாக முதல்வர் விஜய் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவரை விஜய் தேர்வு செய்தது ஏன் என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    Advertisement

    இந்த கப்பலில் 32 இந்தியர்களும் 3 மாலுமிகளும் இருந்தனராம். விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    எனினும் படகு கவிழ்ந்த விபத்தில் 10 தமிழர்கள், 3 ஆந்திர மாநிலத்தவர்கள், 2 மலையாளிகள் என 15 பேர் உயிரிழந்தனர். லாவா செல்போன் நிறுவனம் சார்பில் விற்பனையில் இலக்கை எட்டியவர்களை தங்கள் சொந்த செலவில் சுற்றுலா அனுப்புவது வழக்கமாம்.

    அந்த வகையில்தான் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களை வியட்நாமுக்கு லாவா நிறுவனம் சுற்றுலா அனுப்பி வைத்தது. இதில் வியட்நாம் சென்ற 15 பேர் பலியாகிவிட்டனர். மீதமுள்ள 20 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில் வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், படகு விபத்தில் பலியான தமிழர்களின் உடல்களை பெறவும், காயமடைந்த தமிழர்களுக்கு உதவவும் சிறப்பு அதிகாரியாக சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ்ஸை நியமித்துள்ளார். இவர் நேராக ஹோ சி மின் நகரத்திற்கு செல்கிறார்.

    சந்தோஷ் ஹதிமானியை விஜய் தேர்வு செய்ய காரணம் என்ன என்பதை பார்க்கலாம். யார் இவர் என்பதை பார்க்கலாம்.

    சந்தோஷ் ஹதிமானி காஞ்சிபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் எஸ்பியாக பணியாற்றினார். பிறகு சிபிஐ-யில் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    சர்வதேச வழக்குகளை கையாள்வது, தூதரகங்களை அணுகுவது, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட அனுபவங்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு பொதுவாக இருக்கும்.

    Advertisement

    அது போல் வெளிநாடுகளில் ஏதோ ஒரு பேரிடரால் சிக்கித் தவிப்போரை மீட்பது உள்ளிட்டவைகளிலும் அனுபவம் இருக்கும் என்பதால்தான் முதல்வர் விஜய், சந்தோஷை தேர்வு செய்தார் என்கிறார்கள்.

    சந்தோஷ் 2011ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் நெல்லையில் கமிஷனராகவும் டிஐஜியாகவும் இருந்துள்ளார். அது போல் சென்னை துணை காவல் ஆணையராகவும் பணியாற்றியவர். சேலம் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.