டெல்லி: காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகளான சவுரவ் தாஸ் மற்றம் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தற்போது சிறையில் இருக்கின்றனர். ஆனால், இந்த தண்டனை நீதிபதிகள் கொடுத்தது கிடையாது. மாறாக பிரிட்டிஷ் காலத்து சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று CJP வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜந்தர் மந்தர் பகுதியில் அனுமதியின்றி நுழைந்தது, அங்கு தேசிய கொடியை ஏந்தி போராடியது என 2 பேர் மீதும் FIR இருக்கிறது. ஆனால், இப்போது இவர்கள் சிறையில் இருக்க காரணம்.. இந்த FIR கிடையாது.
பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், BNSS சட்டத்தின் பிரிவுகள் 126 மற்றும் 170ன் கீழ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தை பொறுத்தவரை, 'சிறப்பு நிர்வாக நடுவர்தான்' இந்த சிறை உத்தரவை கொடுத்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உத்தரவை கொடுத்த 'சிறப்பு நிர்வாக நடுவர்' என்பவர் நீதிபதி கிடையாது. அவர் டெல்லி போலீசின் ஐபிஎஸ் அந்தஸ்து கொண்ட ஏசிபி அதிகாரி ஆவார். இந்தியாவை பொறுத்தவரை, குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் மட்டும்தான் போலீசாரிடம் இருக்கிறது. மற்றபடி, குற்றவாளிகளை தண்டிப்பது, அவர்களுக் பிணை வழங்கும் அதிகாரம் எல்லாம் நீதித்துறையிடம்தான் இருக்கிறது. ஆனால், பிரிட்டிஷ் காலத்தில்.. போலீஸ் அதிகாரிகளிடம் இதுபோன்ற நீதி வழங்கும் அதிகாரம் இருந்தது. IPC சட்டங்கள் நீக்கப்படும்போது, பிரிட்டிஷ் காலத்து சட்டங்களை நாங்கள் நீக்கிவிட்டதாக பிரதமர் மோடி பெருமையாக கூறியிருந்தார். ஆனால், BNSS சட்டதில் பிரிட்டிஷ் காலத்து பழைய சட்டங்கள் சில அப்படியே தொடர்கின்றன. அதில், இந்த 'சிறப்பு நிர்வாக அதிகாரமும்' ஒன்று. போலீசார் வசம் தண்டிக்கும் பவர் இருந்தால் என்னவெல்லாம் கூத்து நடக்கும் என்பதற்கு சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவின் சிறை உத்தரவு மிகப்பெரிய உதாரணமாகும். அதாவது 'சிறப்பு நிர்வாக அதிகாரம்' மூலம் ஒருவரை அதிகபட்சமாக 7 நாட்கள் வரை மட்டுமே சிறையில் வைத்திருக்க வேண்டும். அதற்குள் ஜாமீன் கொடுக்க வேண்டும். ஆனால், ஜாமீன் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக 'சிறப்பு நிர்வாக நடுவர்' கையாண்ட நடைமுறை.. இதற்கு முன்னர் யாருமே செய்யாததாகும். அரசு உத்தரவை மீற மாட்டார் என்று 2 பேருக்கும் யாராவது வந்து உத்தரவாதம் கொடுக்க வேண்டும். உத்தரவாதம் கொடுக்க வந்தவர்களை காவல்துறை ஏற்கவில்லை. உத்தரவாதம் கொடுக்க வந்தவர்கள் இதற்கு முன்னர் போரட்டத்தில் பங்கேற்றார்கள், அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது என்று சொல்லி.. காவல்துறை வந்தவர்களை ஏற்க மறுத்துவிட்டது. இது கூட ஓரளவுக்கு நியாயமான காரணம்தான். ஆனால், கல்வியாளர்கள் 2 பேர் உத்தரவு கொடுக்க வந்தார்கள். அவர்களையும் காவல்துறை நிராகரித்திருக்கிறது. காரணத்தை பார்த்தால் காமெடியாக இருக்கிறது. 2 கல்வியாளர்களில் ஒருவரின் முகம், ஆதார் அட்டையில் உள்ள போட்டோவுடன் ஒத்துப்போகவில்லை என்று சொல்லி காவல்துறை மறுத்துவிட்டது. இன்னொருவரிடம், சவுரவ் தாஸின் அம்மா பெயர் என்ன என்று FBI ரேஞ்சுக்கு கேள்விகளை கேட்டிருக்கிறது டெல்லி போலீஸ். வந்தவருக்கு சவுரவ் தாஸைதான் தெரியும். தாஸின் அம்மா பெயர், தாத்தா பெயர் எல்லாம் தெரியாது. இருப்பினும் இந்த காரணத்தை சொல்லி 2வது நபரையும் போலீசார் ஏற்க மறுத்துள்ளனர். இப்படியாக 7 நாட்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் சவுரவ் தாஸ், அசுதோஷுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. தண்டனை வழங்கும் அதிகாரம் போலீஸிடம் இருந்தால் என்னென்ன கூத்து நடக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என CJP விமர்சித்திருக்கிறது.சிறப்பு நிர்வாக நடுவர் (SEM)
பிரிட்டிஷ் சட்டம்
மத்திய அரசின் கேம்
காவல்துறையின் அத்துமீறல்
இதெல்லாம் ஒரு காரணமா?
போட்டோ ஒத்துப்போகவில்லை