ஆசை காட்டிய புரோக்கர்.. ரோல்ஸ் ராய்ஸ் கார் தருவதாக ஆஃபர்! சினிமா மேனேஜரின் முகத்திரையை கிழித்த நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோஷியல் மீடியாவில் பிரபலங்கள் பதிவிடும் பதிவுகள் சில நேரங்களில் இணையத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், கோலிவுட்டில் தனக்கு வரும் வாய்ப்புகள், சினிமாவில் நிலவும் சில ஆழமான கருத்துகள் மற்றும் தன் சொந்த வாழ்க்கை முறை குறித்து நடிகை பிரதீபா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இப்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்தப் பதிவில் அவர் கூறியுள்ள வரிகள் அப்படியே இதோ வாசகர்களின் பார்வைக்கு...

நடிகை பிரதீபா, தனக்கு வரும் சினிமா சான்ஸ் குறித்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Famous Actress

நடிகை பிரதீபா பதிவு

"கோலிவுட்டில் வில்லி கேரக்டரில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. பிரபல இயக்குநர்களிடம் இருந்தும் வாய்ப்புகள் வருகின்றன. இன்றுகூட அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. உண்மையாகவே சொல்கிறேன்! என்ன விளையாட்டு இது?

நல்ல பெண் என்றால் புடவை அணிந்திருக்க வேண்டும், கெட்ட பெண் என்றால் ஷார்ட்ஸ் அணிந்திருக்க வேண்டும் என்றுதான் இன்னும் நினைக்கிறார்கள். எதை வைத்து, ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

முதலில், நான் பட சான்ஸ்களை தேடி அலையவில்லை. பிரபலமான நடிகையாகவோ, வெற்றிகரமான நடிகையாகவோ ஆக வேண்டும் என்ற குறிப்பிட்ட விருப்பம் எனக்குக் கிடையாது. எனக்கு ஆர்வத்தைத் தூண்டும் கதாபாத்திரமாக இருந்தால் நடிப்பேன். ஏனென்றால் ஒரே மாதிரியான விஷயங்களைச் செய்வது எனக்கு சீக்கிரமே சலிப்பை ஏற்படுத்திவிடும்." என்று பதிவிட்டுள்ளார்.

2வது பதிவு - ரோல்ஸ் ராய்ஸ் கார்

அதேபோல தனக்கு வந்த மற்றொரு அனுபவம் குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: "பிரபலமான மேனேஜர் ஒருவர் என்னிடம் வந்து, இந்த சான்ஸை ஏற்றுக்கொண்டால் உங்கள் வீட்டுக்கு முன்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும் என்று சொன்னார்.. என்னை நம்ப வைப்பதற்காக தன்னிடம் இருந்த எல்லா ஆதாரங்களையும் காட்டினார்.

வேண்டாம். ஆட்டோவில் பயணம் செய்வதிலேயே எனக்கு வசதியாக இருக்கிறது... நான் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் இன்னும் 40 அல்லது 50 வருடங்கள் வாழப்போகிறேன். எதிர்காலத்தில் எதிர்பார்த்துக் காத்திருக்க எனக்கென்று ஒரு கனவு வீட்டை வைத்திருக்கிறேன். அது ஒருவேளை நனவாகாமல் போனாலும் எனக்குப் பிரச்சினையில்லை."

3வது பதிவு - சுதந்திரம்

தனது வாழ்க்கை முறை குறித்து மற்றொரு பதிவில் நடிகை சொல்லும்போது, "ஒரே மாதிரியான அன்றாட நடைமுறைகள் எனக்கு பிடிக்காது.. எனக்கு நேரமும் சுதந்திரமும் மட்டும்தான் வேண்டும். எப்போது விருப்பப்படுகிறேனோ அப்போது நடனமாட வேண்டும். எனக்குப் பிடித்த, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். காலையில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும். மனதில் எண்ணங்கள் தோன்றும்போது எழுதவும் படிக்கவும் வேண்டும்.

சிலர் அடிக்கடி என்னிடம், "நீங்கள் என்ன புகைக்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். இலைகளையோ ரசாயனப் பொருட்களையோ சார்ந்து வாழ்ந்தால் என்னால் என்னையே மதிக்க முடியாது.

நான் யாராக மாறிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்வதுதான் என் வாழ்க்கையின் நோக்கம். நான் வாழ விரும்புகிறேன். மற்றவர்கள் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பவில்லை" இவ்வாறு நடிகை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சபாஷ் நடிகை

நடிகையின் இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. பெண்களுக்கு இப்படித்தான் ரூல்ஸ் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கு நடிகை பிரதீபா தைரியமா சம்மட்டியால் அடித்தது போல பதில் தந்திருப்பது கவனம் பெற்று வருகிறது.. கோடி கோடியா பணம் கொடுத்தாலும், பெரிய கார்களில் சுற்றுகிற ஆசையை காட்டினாலும், என் மானமும் என் சுதந்திரமும்தான் எனக்கு முக்கியம்னு அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதானே..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+