தவெகவின் கிளைதான் பாஜக? என்ன விஜய் டக்குன்னு உண்மையை சொல்லிட்டீங்க.. பங்கம் செய்த அதிமுக

  • திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தவெகவின் கிளை பாஜக என டங் ஸ்லிப் பேசிவிட்டு, அடுத்த வரியில் சுதாரித்துக்கொண்டு சரியாக பேசினார். எனினும், விஜய்யின் இந்த பேச்சை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விமர்சித்து இருக்கும் அதிமுக ஐடி விங், "என்ன ப்ரோ பொசுக்குன்னு உண்மையை பேசிபுட்டீங்க" என்று கலாய்த்து பதிவிட்டுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் இன்று தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். வழக்கமாக திமுகவை அதிகம் விமர்சிக்கும் விஜய், இந்த முறையும் திமுகவையே விமர்சித்தார். ஆனால் அதிமுகவை மற்றும் பலர் என்று கூறி கொஞ்சம் கூடுதலாக விமர்சித்தார். முன்பு அண்ணா, அடுத்து எம்ஜிஆர், இப்போது நான் என பேசிய விஜய், பாஜக தான் திமுக மற்றும் அதிமுகவுக்கு ஓனர் என பேசினார்.

    Advertisement

    மேலும் பேசிய விஜய், இந்த டிவிகே புதுசாக ஒரு கிளை ஒன்றை ஓப்பன் செய்துள்ளது. அந்த கிளை வந்து முதலில் பாஜவோடு ஒரு கிளையாக இருந்தது.. இப்போது திமுகவோட ஒரு கிளையாகவும் மாறியுள்ளது.. இவங்க என்ன செய்றாங்களோ.. அதை அப்படியே இவங்களும் செய்வாங்க.. இவங்க என்ன பேசுறாங்களோ, அதை அப்படியே இவங்க பேசுவாங்க.. இவங்க என்ன அறிக்கை விடுவாங்களோ.. அதே அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து இவங்களும் விடுவாங்க.. ” என கூறினார்.

    குறிப்பாக அதிமுகவை விமர்சிக்க நினைத்து டிவிகே என வாய் தவறி கூறியுள்ளார். அதிமுக முதலில் பாஜகவோடு கிளையாக இருந்ததாகவும், இப்போது திமுகவோட ஒரு கிளையாகவும் மாறிவிட்டதாக என சொல்வதற்கு பதிலாக டிவிகேயின் கிளை பாஜக என மாற்றி கூறிவிட்டார். டிவிகே பாஜகவின் கிளை என முதல்வர் விஜய்யே தன் வாயால் பேசியது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்நிலையில் அதிமுக ஐடி விங்கும் விஜய்யின் பேச்சை வைத்து விமர்சனம் செய்து ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளது.. என்ன விஜய் டக்குனு உண்மையை பேசிட்டீங்க என விமர்சித்துள்ளது. அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "ஓஹ்ஹ்.... அப்படியா? என்ன ப்ரோ பொசுக்குன்னு உண்மையை பேசிபுட்டீங்க முதல்வர் விஜய்" என்று பதிவிட்டு விஜய் பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

    வழக்கம் போல் உற்சாகத்துடன் இன்று விஜய் பேசவில்லை என தவெக தொண்டர்களும் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் காலையில் இருந்து சாப்பிடாமல் கொள்ளாமல் காத்துக்கிடந்த தொண்டர்கள், விட்டால் போதும் என்று விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியிலேயே கிளம்பி சென்றனர்.

    Advertisement

    இதே போன்று விஜய் பேசிக்கொண்டிருந்த போதே தவெக தொண்டர் ஒருவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் அழைத்து செல்லப்பட்டார். முதல்வர் விஜய் இன்று 3 மணியளவில் பிரசார கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று 1 மணி நேரம் தாமதமாகவே விஜய் பிரசார மேடைக்கு வருகை தந்தார்.

    English Summary

    While speaking at a TVK campaign rally in Dharapuram, Vijay suffered a slip of the tongue, referring to TVK as a branch of the BJP, though he quickly corrected himself in the very next sentence. However, the AIADMK IT wing shared this clip on social media and mocked him, posting, "Bro, you just blurted out the truth all of a sudden."