பக்தர்களே பணத்தை இழக்க வேண்டும்.. திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

  • திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரையோ, சின்னத்தையோ, சமூக வலைதளத்தையோ போலியாக நிர்வகித்து வருபவர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்கள் தேவஸ்தான மொபைல் செயலியை உபயோகிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் வரும் பொய்யான தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று விடுத்த அறிக்கையில் கூறுகையில், "திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதி, ஆர்ஜித சேவைகளுக்கு பல போலி இணைய தளங்களை உருவாக்கி பக்தர்களை சிலர் மோசடி செய்து வருகின்றனர். இணையங்கள் மட்டுமின்றி, வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களும் திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மோசடி செய்து வருகின்றனர்.

    Advertisement

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டுமே தரிசனம், ஆர்ஜித சேவைகள், விடுதிகளை பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரையோ, சின்னத்தையோ, சமூக வலைதளத்தையோ போலியாக நிர்வகித்து வருபவர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    பக்தர்கள் தேவஸ்தான மொபைல் செயலியை உபயோகிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் வரும் பொய்யான தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். முன்பின் தெரியாத ஆட்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கேட்டுக் கொள்கிறது " இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே போலியான பெயர்கள் மற்றும் லோகோக்களைப் பயன்படுத்தி போலி இணையதளங்கள் பயன்பாட்டில் அவ்வப்போது உலா வருகின்றன. இவற்றின் மூலம் போலி தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட முன்பதிவு என பக்தர்களிடமிருந்து ஆன்லைனில் லட்சக்கணக்கில் பணம் திருடப்படுவது அடிக்கடி நடக்கிறது.

    எனவே அவற்றை நம்பக்கூடாது . அதேபோல் மொபைல் பயன்பாட்டாளர்கள் TTD தேவஸ்தான அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் ), முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வரும் முன்பதிவு லிங்குகளை நம்பி பணப் பரிவர்த்தனை செய்து ஏமாற வேண்டாம்.. ஏனெனில் ஒருபோதும் அப்படி லிங்குகளைதிருப்பதி தேவஸ்தானம் அனுப்பாது. அதேபோல் முன்பதிவு இல்லாத விஐபி தரிசனம் அல்லது உடனடி டிக்கெட்டுகள் வாங்கித் தருவதாகக் கூறும் முன்பின் தெரியாத நபர்களிடமோ அல்லது இடைத்தரகர்களிடமோ பணத்தை தந்துவிடாதீர்கள்.

    English Summary

    Tirupati Devasthanam is taking legal action against those operating fake websites, social media accounts, or using its name and emblem fraudulently. So far, action has been taken against 259 such fake websites.