ஸ்ரீ சிட்டி பாய்லர் வெடிப்பு! டேப்லெட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லை! - விளக்கம்

  • திருப்பதி: ஆந்திரப் பிரதேசம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் 'டிஐஎல் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்' என்ற மருந்து உற்பத்தி ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கும் 'டேப்லெட்ஸ் (இந்தியா) லிமிடெட்' நிறுவனத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

    Advertisement

    அக்.3ம் தேதியன்று 'டிஐஎல் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்' என்ற மருந்து உற்பத்தி ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    Advertisement

    ஆனால், இந்த விபத்து 'டேப்லெட்ஸ் (இந்தியா) லிமிடெட்' நிறுவனத்துடன் தொடர்புடையது என பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அதில், "'டேப்லெட்ஸ் (இந்தியா) லிமிடெட்' நிறுவனத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் எந்தவொரு தொழிற்சாலையோ அல்லது உற்பத்தி பிரிவோ கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    'டிஐஎல் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'டேப்லெட்ஸ் (இந்தியா) லிமிடெட்' ஆகிய இரண்டும் முற்றிலும் தனித்தனியாக இயங்கும் வெவ்வேறு நிறுவனங்களாகும். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பொதுவான உரிமையாளரோ, நிர்வாகமோ கிடையாது.

    Advertisement

    எனவே ஸ்ரீ சிட்டி 'டிஐஎல் ஹெல்த்கேர்' ஆலையில் நடந்த பாய்லர் வெடிப்பு விபத்திற்கும், தங்களது 'டேப்லெட்ஸ் (இந்தியா) லிமிடெட்' நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்துக்கொள்கிறோம்.

    அதே நேரம் இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. பொதுமக்களின் கூடுதல் சந்தேகங்களுக்கு ஊடக தொடர்பு அதிகாரி சுனில் கோத்தாரியின் மெயில் ஐடியை (skk@tablestsindia.com) தொடர்புகொள்ளவும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    Sri City boiler blast: A boiler explosion occurred at the pharmaceutical manufacturing plant of 'TIL Healthcare Private Limited', located in the Sri City Special Economic Zone in the Tirupati district of Andhra Pradesh. There is no connection whatsoever between this incident and the company 'Tablets (India) Limited'.