திருப்பதி ஏழுமலையானை ஒரே டிக்கெட்டில் 2 முறை தரிசிக்கணுமா! நாளை காலை 10 மணிக்கு ரெடியா இருங்க

  • திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் புஷ்பயாகம் சேவைக்கான முன்பதிவு டிக்கெட் நாளை (ஆகஸ்ட் 21 ஆம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    Advertisement

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16 ஆம் தேதி புஷ்பயாக உற்சவம் நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் பெருமாளின் திருவோண நட்சத்திரத்தின் போது இது நடைபெறுகிறது. புஷ்பயாகத்திற்கு முன்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது.

    Advertisement

    இந்த நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சம்பங்கி மண்டபத்தில் உள்ள தங்க தேரில் எழுந்தருளுவார். திருமஞ்சனத்திற்கு பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு பல்லாயிரக்கணக்கான எடை கொண்ட மலர்களால் அர்ச்சனை செய்யப்படும்.

    இதையடுத்து அன்றைய தினம் மாலையே சுவாமி மாட வீதிகளில் வலம் வருவார். நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் புஷ்பயாகத்தில் கலந்து கொள்ள நாளை முன்பதிவு டிக்கெட்கள் வெளியாகின்றன.

    ஒரு டிக்கெட்டின் விலை ரூ 700 ஆகும். ஒரு லாகினில் இரு டிக்கெட் மட்டுமே பெற முடியும். 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவசம். இந்த டிக்கெட்டை பயன்படுத்தி புஷ்பயாகத்தை கண்டு களிப்பதுடன் ஏழுமலையானை இரு முறை தரிசனம் செய்யலாம்.

    Advertisement

    அதாவது காலை 6 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் இரு முறை தரிசிக்கலாம். இந்த டிக்கெட்டை பெற ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது நவம்பர் 16ஆம் தேதிக்கு முன் 180 நாட்களுக்குள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்றவர்கள் இந்த புஷ்பயாகம் டிக்கெட்டை பெற முடியாது.

    அது போல் ரூ 300 சிறப்பு தரிசனம், குலுக்கல் முறை டிக்கெட்டுகளுக்கும் இந்த விதி பொருந்தாது. மொத்தம் 1000 டிக்கெட்டுகள் மட்டுமே தேவஸ்தானம் வெளியிடும்.

    English Summary

    Tirumala Tirupati Devasthanam releases Pushpayagam Darshan tickets tomorrow at 10 am. A ticket costs Rs 700 and ticket holder can darshan lord venkateswara for 2 times.