திருப்பதி ஏழுமலையானை ஒரே டிக்கெட்டில் இரு முறை தரிசிக்க! காலை 10 மணிக்கு காத்திருங்க!

  • திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் புஷ்பயாகத்திற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று 10 மணிக்கு வெளியிடுகிறது.

    Advertisement

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16 ஆம் தேதி புஷ்பயாக உற்சவம் நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் பெருமாளின் திருவோண நட்சத்திரத்தின் போது நடைபெறுகிறது. புஷ்பயாகத்திற்கு முன்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது.

    Advertisement

    இந்த நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சம்பங்கி மண்டபத்தில் உள்ள தங்க தேரில் எழுந்தருள்வார். திருமஞ்சனத்திற்கு பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு பல்லாயிரக்கணக்கான எடை கொண்ட மலர்களால் அர்ச்சனை செய்யப்படும்.

    இதையடுத்து அன்றைய தினம் மாலையே சுவாமி மாட வீதிகளில் வலம் வருவார். நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் புஷ்பயாகத்தில் கலந்து கொள்ள இன்று காலை 10 மணிக்கு முன்பதிவுக்கான டிக்கெட்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    ஒரு டிக்கெட்டின் விலை ரூ 700 ஆகும். ஒரு லாகினில் இரு டிக்கெட் மட்டுமே பெற முடியும். 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவசம். இந்த டிக்கெட்டை பயன்படுத்தி புஷ்பயாகத்தை கண்டு களிப்பதுடன் ஏழுமலையானை இரு முறை தரிசனம் செய்யலாம்.

    Advertisement

    அதாவது காலை 6 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் இரு முறை தரிசிக்கலாம். இந்த டிக்கெட்டை பெற ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது நவம்பர் 16ஆம் தேதிக்கு முன் 180 நாட்களுக்குள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்றவர்கள் இந்த புஷ்பயாகம் டிக்கெட்டை பெற முடியாது.

    இந்த புஷ்பயாகம் டிக்கெட்டை பெற திருப்பதி தேவஸ்தானம் செயலியிலோ அல்லது இணையதளத்திலோ புக் செய்யலாம். டிக்கெட் புக் செய்ய ஒரு ஐடி அவசியம். அந்த ஐடியில் இருவருக்கு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். எனவே இன்று காலை 10 மணிக்கு ஆதார் எண் அல்லது ஏதேனும் அடையாள அட்டை, வயது, முழு பெயர், பாலினம் உள்ளிட்ட விவரங்களுடன் ஹை ஸ்பீட் டேட்டாவுடன் காத்திருங்கள்.

    English Summary

    Tirumala Tirupati Devasthanam releases Pushpayagam tickets at 10 am in its official website. Only 1000 tickets will be released.