திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு லட்டு, வடை பிரசாதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விநியோகம் இன்று நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. யாருக்கெல்லாம் இந்தப் பிரசாதம் கிடைக்கும், எங்கு சென்று வாங்க வேண்டும், என்னென்ன ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவாரி பிரசாதங்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தகுதியுள்ளவர்களுக்கு இலவசமாக லட்டு மற்றும் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு பெரிய லட்டு மற்றும் ஒரு வடை வழங்கப்படும். இந்தப் பிரசாதங்களைப் பெறுவதற்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
திருப்பதியில் கே.டி. சாலையில் உள்ள தேவஸ்தான நிர்வாக வளாகத்தில், ஊழியர்கள் உணவகத்திற்கு அருகில் அமைந்துள்ள புதிய ஜபாலி கட்டடத்தில் பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. இன்று நவம்பர் 7 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வந்து காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க, ஓய்வூதிய ஆணை எண் (PPO) அடிப்படையில் பிரசாதம் பெறுவதற்கான நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பர் 7-ம் தேதி PPO எண் 164 முதல் 3,250 வரை உள்ளவர்களுக்கும், நவம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை 3,251 முதல் 9,050 வரையிலான எண் கொண்டவர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. அதேபோல், நவம்பர் 16 முதல் 19-ம் தேதி வரை 9,051 முதல் 12,550 வரையிலான PPO எண் கொண்டவர்களுக்கும், நவம்பர் 20-ம் தேதி 12,551 முதல் அதற்கு மேற்பட்ட எண் கொண்டவர்களுக்கும் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசாதம் பெற வரும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய TTD ஸ்மார்ட் கார்டைக் காண்பிக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள PPO எண் மற்றும் தேதிக்கு ஏற்ப வந்து பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த ஸ்ரீவாரி பிரசாதத்தைப் பெறுவதற்காக, திருப்பதி மட்டுமின்றி பிற பகுதிகளில் வசிக்கும் தகுதியுள்ள ஓய்வூதியதாரர்களும் வரலாம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப ஓய்வூதியத்தைப் பெற்று வருபவர்களுக்கும் ஸ்ரீவாரி பிரசாதம் வழங்குவது அவர்களுக்கான சிறப்பு மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகவே பயனாளிகளின் PPO எண்களுக்கு ஏற்ப வெவ்வேறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அனைவரும் ஒரே நாளில் திரண்டு நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க முடியும். பிரசாதம் பெற வருபவர்கள் தங்களுக்குரிய தேதியை முன்கூட்டியே சரிபார்த்துக்கொண்டு, தேவையான ஸ்மார்ட் கார்டுடன் புதிய ஜபாலி கட்டடத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்..!!எங்கு, எப்போது கிடைக்கும்?
ஸ்மார்ட் கார்டு அவசியம்
பேஸ்புக் பதிவை 'ஷேர்' செய்தால் திருப்பதி லட்டு.. தமிழக இளைஞரை தேடும் திருமலை தேவஸ்தானம்
சிறப்பு மரியாதை