பிரிட்டன் பெண் எழுத்தாளருக்கு நோபல்
ஸ்டாக்ஹோம்:
இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்பரிசை இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் பெற்றுள்ளார்.
இவரது இயற்பெயர் டோரிஸ் மே டெய்லர். 1919ம் ஆண்டு ஈரானில் பிறந்தவர் டெய்லர். பின்னர் அவரது குடும்பம் ஜிம்பாப்வேக்கு இடம் பெயர்ந்தது. 1925ம் ஆண்டு டெய்லர் தனது முறையான படிப்பை 13 வயதில் முடித்தார்.
88வயதாகும் லெஸ்ஸிங் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெறும் அதிக வயதானவர் என்ற பெருமையையும் லெஸ்ஸிங் பெறுகிறார். தி கம்யூனிஸ்ட் தீம், தி சைக்காலாஜிக்கல் தீம் மற்றும் தி சுஃபி தீம் என்ற மூன்று நூல்களுக்காக லெஸ்ஸிங்குக்கு நோபல் கிடைத்துள்ளது.
தி கிராஸ் இஸ் சிங்கிங் என்ற நாவல்தான் லெஸ்ஸிங்கின் முதல் எழுத்தாகும். இது 1950ம் ஆண்டு வெளியானது. 1985ம் ஆண்டு இவர் எழுதிய தி குட் டெரரிஸ்ட் என்ற நாவலுக்கு புக்கர் விருது கிடைத்தது. 1995ம் ஆண்டு எல்.ஏ.டி. புக் விருதைப் பெற்றார்.
நோபல் பரிசைப் பெறும் லெஸ்ஸிங்குக்கு ரூ. 6.08 கோடி பரிசாகக் கிடைக்கவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications