டாய்லெட்டில் பேப்பருக்குப் பதில் தண்ணீரைப் பயன்படுத்திய ஊழியர் நீக்கம்
மெல்போர்ன்: டாய்லெட் பேப்பரை பயன்படுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்திய பிலிப்பைன்சை சேர்ந்த ஊழியர் ஒருவரை ஆஸ்திரேலிய நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் டவுன்ஸ்விலே என்ஜீனியரிங் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனத்தில் அமதர் பெர்னாபே என்ற ஊழியர் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்தார்.
இவர் டாய்லெட் போனால் அங்கிருக்கும் பேப்பரைப் பயன்படுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
டாய்லெட் பேப்பரை பயன்படுத்துமாறு கம்பெனி நிர்வாகம் இவரை பலமுறை கேட்டுக் கொண்ட போதும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நிறுவன மேனேஜர் பைரன் கார்டர் கூறுகையில், ஆஸ்திரேலிய பழக்க வழக்கங்களை பின்பற்றவில்லை என்பதற்காக அவர் நீக்கப்படவில்லை. அவர் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தாததால் சுகாதார கேடு ஏற்பட்டது. டாய்லெட்டில் அதிக நீரை சிந்திவிடுகிறார்.
இதற்கு மற்ற ஊழியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. அவரிடம் பலமுறை இது பற்றி விளக்கப்பட்டது. ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. அதனால் நீக்கி விட்டோம் என்றார்.
நம்ம ஊர் டாய்லெட் பக்கம் இவரெல்லாம் வந்தால் மயக்கமே போட்டு விடுவார் போலிருக்கே ...












Click it and Unblock the Notifications