கருணாநிதிக்கு உலக திருக்குறள் பேரவை சார்பி்ல திருக்குறள் பேரொளி பட்டம்
சென்னை: உலக திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி என்ற பட்டம் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது. உலக பொதுமறை திருக்குறளுக்கு எழுத்துப்பணி, சொற்பணி, செயல்வடிவம் அளித்தவர்கள் உண்டு. எழுத்து, சொல், செயல் என்று ஒருங்கிணைத்து திருக்குறள் பணியாற்றுபவர் முதல்வர் கருணாநிதி.
சென்னையில் வள்ளுவர்கோட்டம், கன்னியாகுமாரியில் திருவருவச்சிலை, பெங்களுரில் 18 ஆண்டுகளாக கோணிப்பையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது, 1330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பொற்கிழி விருது, குறளோவியம், திரு வள்ளுவர் ஆண்டை தமிழ்புத்தாண்டாக அறிவித்தது என்பது உட்பட பல்வேறு பணியாற்றியுள்ளார்.
திருக்குறள் பணியில் வாழ்நாள் சாதனையாளராக விளங்கிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு இப் பேரவை சார்பில் வரும் 10ம் தேதியன்று, சென்னையில் 'திருக்குறள் பேரொளி' பட்டம் வழங்கப்பட உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள விழாவில், முதல்வருக்கு திருக்குறள் பேரொளி பட்டத்தை நான் வழங்குகிறேன். முதல்வர் ஏற்புரை வழங்குகிறார்.
உயர்நீதி்மன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார் அடிகளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications