ஆட்டத்தை கலைத்து போடும் டிரம்ப்.. AI ரூல்ஸ் மொத்தமாக மாற்றம்.. அமெரிக்காவே ஆட்டம் கண்டுவிடும் போல!
வாஷிங்டன்: ஏஐ துறையில் குறுகிய காலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபரான டிரம்ப், ஏஐ தொடர்பாக சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். இது அமெரிக்காவில் ஏஐ சார்ந்த ரூல்ஸ்களை மொத்தமாக மாற்றுவதாக இருக்கும். டிரம்ப் இந்த சட்டத்தைக் கொண்டு வர என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ துறை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக சாட்ஜிபிடி வருகை ஏஐ துறைக்கு பூஸ்ட்டை கொடுத்தது. அதன் பிறகு பெர்பிளக்ஸிட்டி, ஜெமினி, க்ராக், மெட்டா என பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டன. இவை சந்தையைப் பிடிக்கக் கடுமையாகப் போராடி வருகின்றன.

ஏஐ துறை
அதேநேரம் ஏஐ என்பது முற்றிலும் புதுமையான ஒன்று என்பதால் பல நாடுகளில் இது தொடர்பாகத் தெளிவான விதிகள் இல்லை. ஒவ்வொரு நாடும் இது தொடர்பான விதிகளை இப்போது தான் வகுத்து வருகிறது. இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு தொடர்பாக டிரம்ப் மிக முக்கியமான ஒரு உத்தரவில் கையெழுத்திட இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை தொடர்பான இந்த உத்தரவில் டிரம்ப் சீக்கிரம் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
அதாவது இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திலும் தனித்தனியாக ஏஐ சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஒரே ஏஐ சட்டம் கொண்டு வர வழிவகை செய்யும் வகையில் அந்த சட்டத்தைக் கொண்டு வருகிறார். இதன் மூலம் அமெரிக்காவில் ஏஐ சார்ந்த முடிவுகளை டிரம்ப் அரசு மட்டுமே எடுக்கும்.
டிரம்ப் சொல்வது என்ன
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "50 மாகாண அரசுகளிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. 50 மாகாணங்களிடமும் தனித்தனியாக ஒப்புதல் பெற வேண்டும் என்பது பேரழிவாகவே இருக்கும் யாராலும் பிஸ்னஸ் நடத்த முடியாது.. ஒரு மாகாணத்தில் ஒப்புதல் வாங்கி தொழிலை ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அடுத்த மாகாணத்திற்கு மீண்டும் அனுமதி வாங்க வேண்டும். முதலில் இருந்து அதற்கான பிராசஸை தொடங்க வேண்டும். அதை மாற்றப் போகிறோம்" என்றார்.
அடுத்து என்ன
டிரம்பின் திட்டத்தின் கீழ் தனியாக எதாவது மாகாண அரசுகள் ஏஐ சட்டத்தை வைத்திருந்தால் அந்த மாகாணங்களுக்கு எதிராகவே வழக்கு தொடர முடியும். மேலும், அட்டர்னி ஜெனரலின் கீழ் ஒரு AI டாஸ்க் போர்ஸ்ஸையும் டிரம்ப் ஆரம்பிக்க இருக்கிறார். AI துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாகாண அரசுகளின் AI சட்டங்களை எதிர்ப்பதே இந்த டாஸ்க் போர்ஸின் ஒரே நோக்கமாக இருக்கும்.
ஏன் முக்கியம்
மேலும், இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட உடனேயே 90 நாட்களுக்குள் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சர் ஒரு ரிப்போர்ட்டை வெளியிடுவார். அதில் எந்த மாகாண அரசுகள் டிரம்ப் அரசுக்கு எதிரான ஏஐ விதிகளை வைத்துள்ளது என்பது விளக்கப்பட்டு இருக்கும். அந்த ஏஐ விதிகளை மாகாண அரசுகள் நீக்கவில்லை என்றால் அவர்களின் மானியங்களை நிறுத்தவும் டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் ஏஐ வளர்ச்சியை வேகப்படுத்தவே டிரம்ப் இந்த உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ஏஐ நிறுவனங்களுக்கு இருக்கும் சிக்கல் குறையும் என்றும் ஒரே அனுமதியைப் பெற்றுவிட்டு பிஸ்னஸை விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது!












Click it and Unblock the Notifications