நேற்று மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு.. இன்று த்ரிஷாவின் சைலண்ட் ரிப்ளை? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று மலையாள நடிகர் தியான் சீனிவாசன் பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் பெரிய விவாதத்தையே கிளப்பியது. நான் முதல்வராகும் போது நடிகை நவ்யா நாயர் பட்டு புடவை கட்டி வந்து வரிசை முதல் வரிசையில் அமர்ந்து கண்கலங்க வேண்டும் என்று அவர் காமெடியாக பேசியதும், பலரும் தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா முதல் வரிசையில் அமர்ந்து கண்கலங்கிய சம்பவத்தை மறைமுகமாக கலாய்த்தார் என்று கூறி வந்தனர்.

மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு

இந்த விவாதம் இன்னும் ஓயாத நிலையில் இன்று நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்த போட்டோ தான் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதுதான் அந்த நடிகரின் பேச்சுக்கு பதிலடியா? அல்லது இது வழக்கமாக த்ரிஷா செய்யும் அதே யுக்தியா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

த்ரிஷா பற்றிய சர்ச்சை

த்ரிஷா பற்றி எத்தனையோ சர்ச்சைகளும், வதந்திகளும் பரவி இருக்கிறது. அவர் செய்யும் செயல்கள் எல்லாம் வேறுவிதமாக பரவி இருக்கிறது. ஆனால் அது குறித்து எந்த இடத்திலும் த்ரிஷா பதில் சொன்னது கிடையாது. அதனாலேயே பல பிரபலங்களும் த்ரிஷாவை பாராட்டி இருக்கிறார்கள். விமான நிலையத்தில் கூட த்ரிஷா பற்றிய சர்ச்சைகளுக்கு கேள்வி கேட்டபோது செய்தியாளர்களை கண்டு கொள்ளாமல் த்ரிஷா சென்றதும் பெரிதாக பேசப்பட்டது. அதேபோல நடிகர் தியான் பேச்சுக்கு பதிலடி கொடுக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Trisha Dhyan Sreenivasan Vijay Instagram Story Kollywood Malayalam Cinema

அதாவது தற்போது த்ரிஷா பகிர்ந்த ஸ்டோரியில் மஞ்சள் நிற டிரஸ்சில் எடுத்த செல்பி, காபி, ஒரு பொக்கே, தான் படித்து வரும் Freida McFadden எழுதிய The Intruder புத்தகம் மற்றும் தான் சாப்பிட்ட உணவுகளையும் போட்டோவாக எடுத்து அதில் பகிர்ந்து இருக்கிறார். அதனுடன்"Blissful me days" என்ற கேப்ஷனும் கொடுத்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து நேற்று தியான் சீனிவாசன் பேச்சு வைரலான நிலையில் இன்று திரிஷா எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக தனது நாளை ரசிக்கும் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று த்ரிஷா சொல்லாமல் சொல்கிறாரா? என்று ஒரு நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவதை அறிவித்த பிறகு திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட போது அவருடன் த்ரிஷா ஒரே வண்ண உடையில் கலந்து கொண்டார். அப்போது அது பெரிய அளவில் பேசப்பட்டது.

த்ரிஷா பற்றிய சர்ச்சை

இருவரும் பல வருடங்களாக சினிமாவில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போது விஜயின் குடும்ப பிரச்சனை பேசிக்கொண்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சென்றது பல விவாதங்களையும் ஏற்படுத்தியது. ஆனாலும் அதற்கு எந்த இடத்திலும் த்ரிஷா பதிலும் சொல்லவில்லை. சமீபத்தில் கூட விஜய்யின் பிறந்த நாளில் திரிஷா எந்த போஸ்டும் போட்டு விடக்கூடாது என்று பலர் வருத்தத்தோடு காத்திருந்தனர்.

Trisha Dhyan Sreenivasan Vijay Instagram Story Kollywood Malayalam Cinema

ரசிகர்கள் கருத்து

அவர்களுக்காக முதல் நாளில் எந்த போஸ்டும் போடாமல் விட்டுவிட்டு விஜய் பிறந்தநாள் முடிந்த மறுநாள் 5 விதமான கேக்குகளுடன் விஜய் அமர்ந்திருப்பது போலவும் அவரை திரிஷா ரசிப்பது போலவும் ஒரு போட்டோ போட்டு இருந்தார். இது ஒரிஜினலா? அல்லது ஏஐயா? என்பதுதான் பலருக்கும் கேள்விகளாக இருந்தது. அது குறித்து கூட த்ரிஷா இன்னும் விளக்கமும் கொடுக்கவில்லை, அந்த பதிவை நீக்கவும் இல்லை.

நான் முதல்வராகும்போது.. அந்த நடிகை புடவை கட்டி, முதல் வரிசையில் கண் கலங்கனும்! மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு
இப்படியான நிலையில் இப்போது சோஷியல் மீடியாவில் என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன் நான் ரொம்ப கூலாக என்னுடைய நாளை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வது போல த்ரிஷா போஸ்ட் இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+