நான் முதல்வராகும்போது.. அந்த நடிகை புடவை கட்டி, முதல் வரிசையில் கண் கலங்கனும்! மலையாள நடிகரின் சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள நடிகர் தியான் சீனிவாசன் பேசிய ஒரு ஜாலியான பேச்சு தான் இப்போ சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. காரணம் அவர் சொன்ன வார்த்தைகள் நேரடியாக இல்லாவிட்டாலும் முதல்வர் விஜய் பதவி ஏற்பு விழாவில் நடிகை திரிஷா முதல் வரிசையில் பட்டுப்புடவை அமர்ந்திருந்த சம்பவத்தை கலாய்ப்பது போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். என்ன நடந்தது என்று பின்னணி பற்றி விரிவாக பார்க்கலாம்.

மலையாள நடிகர் தியான் சீனிவாசன் பேச்சு

விசிட்டர்ஸ் படத்தின் விழாவில் நடிகை நவ்யா நாயர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது மைக்கை பிடித்த தியான் சீனிவாசன், நான் ஒரு நாள் கேரளா முதல்வராகும்போது நவ்யா நாயர் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு முதல் வரிசையில் அமர்ந்து எனக்காக கைதட்டி, கண்கலங்க வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும் என்று காமெடியாக பேசினார். இதை கேட்டால் நவ்யா நாயர் உட்பட அங்கே அரங்கத்தில் இருந்தவர்களும் கை தட்டி சிரித்துக்கொண்டிருந்தனர்.

Dhyan Sreenivasan Vijay Trisha Navya Nair

விஜய் ரசிகர்கள் வருத்தம்

அப்போது நவ்யாவும், அந்த ஒரு நாள் வந்தால் நான் கண்டிப்பாக அப்படியே செய்கிறேன் என்று சிரித்தப்படியே பதில் சொன்னார். ஆனால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதும் தமிழ் ரசிகர்கள் இதை வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொண்டனர். அதாவது விஜய் பதவி ஏற்பு விழாவில் திரிஷா பட்டு புடவை கட்டி, முதல் வரிசையில் அமர்ந்து கண்கலங்கிய காட்சியைத்தான் இவர் இப்படி மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.

முதல்வராக விஜய் பதவி ஏற்ற நாளில் திரிஷா பட்டு புடவை கட்டி முதல் வரிசையில் அமர்ந்திருந்த போட்டோஸ் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு அவர் அணிந்திருந்த புடவை கூட ஆன்லைன் விற்பனையில் ஜோராக கல்லா கட்டியது. இதனால் இந்த விஷயத்தை வைத்துதான் மலையாள நடிகர் இப்போது இப்படி கிண்டல் பண்ணுகிறார் என்று விஜய்யின் ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர்.

ஏற்கனவே நடந்த சம்பவம்

தியான் சீனிவாசன் இதுபோல சர்ச்சையாக பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும், இன்று திரிஷா வரவில்லையே? இன்று விஜய்க்கு தேர்தல் முடிவு தானே? என்று தியான் சீனிவாசன் காமெடியாக பேசியது அப்போதும் சோசியல் மீடியாவில் விவாதமாக மாறி இருந்தது. இதனால் இந்த முறை அவர் சொன்ன டயலாக்கும் அவர் மீண்டும் விஜய் திரிஷாவை சீண்டி கலாய்க்கிறார் என்று ரசிகர்கள் ஆதாரத்தோடு பழைய வீடியோக்களையும் இப்போதைய வீடியோவையும் இணைத்து பேசி வருகின்றனர்.

ரசிகர்கள் சப்போர்ட்

ஆனால் மலையாள ரசிகர்கள், தியான் சீனிவாசன் நவ்யா நாயரின் தீவிர ரசிகர் என்பதை பற்றி அவர் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த உற்சாகத்தில் தான் அவர் இந்த மாதிரியெல்லாம் டயலாக் பேசி இருக்கலாம் என்றும் அவருக்கு சப்போர்ட் செய்கின்றனர். எது எப்படியோ ஒரு ஜாலியான மேடைப்பேச்சு இப்போது விஜய் திரிஷா ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+