பெண்கள் தொழில் தொடங்க வெற்றி மகளிர் திட்டம்! ரூ 5 கோடி வரை கடன் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தவெக அரசு பட்ஜெட்டில் அறிவித்த வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற வழிகாட்டு நெறிமுறைகள், என்னென்ன தகுதிகள் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி, சேவைத் துறைகளில் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களை விரிவுப்படுத்தவும், நவீனமயமாக்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலம் வாங்குதல், கட்டடங்கள் கட்டுதல், புதிய இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் வாங்குதல் உள்ளிட்ட செலவுகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் ரூ 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ 5 கோடி வரை கடன் பெறலாம்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், என்னென்ன தகுதிகள் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ளன.
திட்டத்தின் குறிக்கோள்
உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் அல்லது பல்வகைப்படுத்துவதற்கும் மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு நிதியுதவித் திட்டமாகும்.
திட்டத்தின் நோக்கம்
தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம் வாங்குவதற்கும். திட்டம் சார்ந்த கட்டிடங்களை கட்டுவதற்கும். இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை வாங்குவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.
தகுதிவாய்ந்த நிறுவன அமைப்புகள்
மகளிர் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 51 சதவீகித பங்குரிமையைக் கொண்டுள்ள
➢ தனியுரிமை / ஒரு மனித நிறுவனங்கள் (Proprietary/One Person Company)
➢ கூட்டாண்மை நிறுவனங்கள் & வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnership/LLP Firms)
➢ தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (Private/Public Ltd. Company).
தொழிற்பயிற்சி
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute) மூலம் முதல்முறை முனைவோர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.
கடன்தொகையின் உச்சவரம்பு
குறைந்தபட்சம் : ரூ.10 லட்சம் அதிகபட்சம் : ரூ.500 லட்சம்/ ரூ 5 கோடி வரை
பயனாளர்களின் பங்களிப்புத்தொகை
புதிய நிறுவனங்கள் :
➢ திட்டச் செலவில் 20 சதவீதம்
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் :
➢ திட்டச் செலவில் 15 சதவீதம்
கடன்- பங்கு விகிதம் (நிலுவைக் கடன்களையும் சேர்த்து) 4.00:1.00
வட்டி விகிதம்
முதன்மை கடன் வட்டி விகிதம்
தற்போது ஆண்டுக்கு 9.95 சதவீதம்
கடனை திருப்பிச் செலுத்தும் முறை - மாதத்தவணை
கடனை திருப்பிச் செலுத்தும் காலம்- 9 ஆண்டுகள் (2 ஆண்டுகள் வரையிலான தவணை ஒத்தி வைப்ப காலம் உள்பட)
சிபில் ஸ்கோர் தனிநபர்களுக்கு 600-க்கு மேல் இருக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தரவரிசை 7-க்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பிணையச் சொத்து
➢ புதிய மற்றும் 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள்: அசையாச் சொத்து வடிவில் - கடன் தொகையில் 40 சதவீதம்
➢ நல்ல செயல்பாட்டுப் பதிவுடன் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களுக்கு: அசையாச் சொத்து வடிவில் கடன் தொகையில் 20 சதவீதம்
ஆய்வுக் கட்டணம்
➢ இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
முன்கூட்டி செலுத்த வேண்டிய கட்டணம்
➢ கடன்தொகையில் 0.25 சதவீதம் சலுகை கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
