"என் சகோதரிகளை பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இன்று தாராபுரத்தில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். "தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்கும் ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை நான் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பார்ப்பேன்" என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

dharapuram

அந்த வகையில் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் ரோடு ஷோ நடத்தி வருகிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தற்போது கோவை சென்ற முதல்வர் விஜய், கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திறந்த வாகனத்தில் இருந்தவாறு ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார். சுமார் 30 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர் விஜய்.

முதலமைச்சர் விஜய்யை கண்டு மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். தன்னை வரவேற்க திரண்ட மக்களை நோக்கி கையசைத்தார் விஜய். மலர்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பரிசளிக்கும் தொண்டர்களிடம் அவற்றைப் பெற்றுக்கொள்கிறார். விஜயை வரவேற்று மகக்ள் ஆரத்தி எடுத்தனர். இந்த ரோடு ஷோவின்போது மக்களின் கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ரோடு ஷோவின்போது தாராபுரம் மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் விஜய், "என் மக்களை சந்திக்க நான் ஏன் பயப்பட வேண்டும்? தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்க வரும் ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை நான் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பார்ப்பேன். அதைப் பற்றி உங்களுக்கு என்ன?

நான் முந்தாநாள் மதுராந்தகம் போயிருந்தேன். அங்கு ஒவ்வொரு ஊரிலும் மக்களைப் பார்த்துப் பேசியது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதேபோல்தான் நமது தாராபுரம் சொந்தங்களையும் பார்க்க வந்துள்ளேன். ஒரு சின்ன உண்மையை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

இந்த திமுகவையும், மற்றும் பலரையும் ஆதரிப்பது, பெண்களை அசிங்கமாக பேசியவர்களை ஆதரிப்பது போலாகிவிடும் என்று சொன்னேன். அதை வெறும் ஓட்டுக்காக மட்டுமே சொல்லவில்லை. என்ன நடந்தது? முந்தாநாள் ஸ்டாலின் சார் வந்து என்ன பேசிவிட்டுப் போனார்? தயவுசெய்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க என அப்பாவும் புள்ளையும் வந்து இப்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்."

என்ன பேச்சு பேசிவிட்டு போயிருக்கிறார். மறக்கிற மாதிரியா ஸ்டாலின் சார் நேற்று முன்தினம் பேசினார்? காது கொடுத்து கேட்க முடியாதபடிதான் அவர் வளர்த்து வைத்திருக்கும் எல்லோரும் பேசுகிறார்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நான் அதை பொறுத்துக்கொள்வேன். ஆனால், என் சகோதரிகளை பற்றியோ நம் வீட்டில் இருக்கும் பெண்களைப் பற்றியோ பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்." என ஆவேசமாகப் பேசியுள்ளார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+