நான் தன்னந்தனி ஆளு.. தாராபுரம் வந்து பாரு! சிஎம் விஜய்க்காக வெளியூர் கூட்டம்! அணிவகுத்த கார்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் 6ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இன்று அங்கு பிரம்மாண்ட ரோட் ஷோ நடத்துகிறார். மதுராந்தகத்தில் எதிர்பார்த்த கூட்டம் வராத நிலையில் தாராபுரத்தில் அப்படி நடந்து விடக்கூடாது என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கார்களில் சாரை சாரையாக தாராபுரத்தில் இறக்கப்பட்டு இருக்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருமதி சத்யபாமா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

by election 2026

கோவை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வரும் ஜோசப் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்திற்கு வருகிறார். இதையொட்டி, தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 ஹெலிகாப்டர் தளங்களிலும் வெள்ளை அடிக்கும் பணிகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர் தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியம் ஜோசப் விஜய் தாராபுரத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சாலை வழியாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜோசப் விஜய் தாராபுரத்திற்கு வருவது இது இரண்டாவது முறையாகும் என்பதால், அவரது வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக திரளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தல் பிரசாரம் நடைபெறும் பகுதிகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்புள்ளதால் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகை மற்றும் சாலைப் பிரசாரத்தை முன்னிட்டு தாராபுரம் நகரம் மற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் வருகையை முன்னிட்டு தாராபுரத்தை விட வெளியூர்களில் இருந்துதான் அதிக அளவு வாகனங்கள் தாராபுரம் நகருக்குள் வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. அதாவது மதுராந்தகத்தில் விஜய், முதல் பிரச்சாரத்திற்கு வந்த ஒரு கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் 2வது முறை வீதி வீதியாக சென்றதால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. பல இடங்களில் விஜய் தனியே செல்வது போல் தான் காட்சிகள் இருந்தது.

இது சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆனது. தற்போது தாராபுரம் கிராம பகுதிகள் நிறைந்த இடம் என்பதால் மக்கள் வருகை இல்லாவிட்டால், விஜய்க்கு ஆதரவில்லை என்ற தோற்றம் ஏற்படும் என்பதால், வெளியூர்களில் இருந்து தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை இறக்கி இருக்கின்றனர் மாவட்ட செயலாளர்கள். திண்டுக்கல், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் கூட்டம் கூட்டமாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும், மகளிர் அணியினரும் கிளம்பி வந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்தபட்சம் 20 கார்களில் ஆட்களை அழைத்து வரவேண்டும் என உத்தரவு பறந்திருக்கிறதாம். இதை அடுத்து அப்பகுதிகளில் இருந்து காலையில் இருந்தே ஏராளமானோர் தாராபுரத்துக்கு சென்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+