5 நாள்தான் டைம்.. சென்னையில் அதிகாரிகள் தெரு தெருவாக ரெய்டு விட போறாங்க? வாகன ஓட்டிகளே உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல இடங்களில் மீண்டும் சாலைகள் போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த சாலைகள் முறையாக மில்லிங் செய்து போடப்பட்டு வருகிறது. இப்படி மில்லிங் செய்யப்படும் சாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ரோடுகளை மில்லிங் செய்த 5 நாட்களுக்குள் புதிய சாலைகளை அங்கே அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள திருக்குறள் முனுசாமி தெரு, வேணுகோபால் தெரு, பெருங்குடி காமராஜர் நகர் சாலை உள்ளிட்ட பல சாலைகள் தூர்வாரப்பட்டும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேற்கு மாம்பலத்தில் ஒரு சில சாலைகள் மில்லிங் செய்து நான்கு மாதங்களுக்குப் பிறகு மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

Chennai to get newly laid roads New milling rules for the contractors

இதையடுத்து GCC கமிஷனர் மில்லிங் செய்யப்பட்ட சாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 15 நோடல் அலுவலர்கள் தினசரி ஆய்வு அறிக்கைகளை தலைமைப் பொறியாளரிடம் வழங்க வேண்டும் என்றும், மில்லிங் செய்த பின் சாலை அமைக்கும் பணியைத் தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஒப்பந்ததாரர்கள் சாலை அமைப்பதற்கான சாத்தியமான தேதியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மில்லிங் செய்ய வாகனங்களை வாடகைக்கு எடுக்கிறார்கள்.

மில்லிங் இயந்திரத்திற்கான தினசரி வாடகையைத் தவிர்க்க, அவர்கள் ஒரே நேரத்தில் பல சாலைகளை மில்லிங் செய்கிறார்கள். ஆனால் அடுத்த நாளே அனைத்து சாலைகளையும் அவர்களால் ரிலே செய்ய முடியாது. இதனால் நகரில் உள்ள பல சாலைகள் மில்லிங் செய்யப்பட்டு அப்படியே கைவிடப்படுகிறது. இங்கே சாலைகளை அமைக்க தாமதம் ஏற்படுகிறது. இப்படி மில்லிங் செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சாலை பிரச்சனை: சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. புதிய சாலைகளை போடும் பணிகள் நடந்து வந்தன. ஆனால் தேர்தல் விதிகள் காரணமாக இவை முடக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் முடிந்ததும் இந்த சாலைகள் மீண்டும் போடப்பட உள்ளன.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, 1,188 கூடுதல் சாலைகளை மறுசீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ஒன்றரை மாதங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் 10 சதவிகித சாலைகள் மீண்டும் வேறு வேறு காரணங்களுக்காக தோண்டப்படலாம் என்று கூறப்படுகிறது.

மற்ற திட்டங்களுக்காக சாலைகள் தோண்டப்பட்டால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். பல பேருந்து வழித்தடங்கள் உட்பட 10,000 சாலைகளை மறுசீரமைக்கும் பணி சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது. பல சாலைகளில் பணி நடந்து வருகிறது.

நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுமார் 10% சாலைகள் வேறு வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மீண்டும் தோண்டப்பட உள்ளது. பல பேருந்து வழித்தடங்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட சாலைகளை மறுசீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. ஆனால் இதில் 1000 சாலைகள் மீண்டும் தோண்டப்பட வாய்ப்பு உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுமார் 10% உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக தோண்டப்பட உள்ளது. மார்ச் 20ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட இப்பணி, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடரும். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன், 1,188 கூடுதல் சாலைகளை மறுசீரமைக்கும் பணியை, குடிமை அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணி, ஒன்றரை மாதங்களுக்கு தொடரும். 2023-24ல் அடையாளம் காணப்பட்ட சாலைகளை 15 நாட்களில் மறுசீரமைப்போம். சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சாலைகள் ஏப்ரல் இறுதிக்குள் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+